பாதாள சாக்கடை திட்டப் பணிக்கு கூடுதல் நிதி!...திட்ட மதிப்பு, ரூ.169 கோடியானது| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பாதாள சாக்கடை திட்டப் பணிக்கு கூடுதல் நிதி!...திட்ட மதிப்பு, ரூ.169 கோடியானது

Added : டிச 09, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
 பாதாள சாக்கடை திட்டப் பணிக்கு  கூடுதல் நிதி!...திட்ட மதிப்பு, ரூ.169 கோடியானது

பொள்ளாச்சி:பொள்ளாச்சி நகராட்சியில், பாதாள சாக்கடை திட்டத்துக்கு கூடுதலாக, 60 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்ய கோரப்பட்டது. அதில், முதற்கட்டமாக, 30 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.பொள்ளாச்சி நகராட்சியில், 109.62 கோடி ரூபாய் மதிப்பீட்டில், பாதாள சாக்கடை திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த, இரண்டு ஆண்டுகளாக பணிகள் நடக்கிறது.ஆள் இறங்கும் குழிகள், கழிவுநீர் குழாய் மற்றும் கழிவுநீர் உந்து நிலையம், சுத்திகரிப்பு நிலையம் கட்டும் பணி நடக்கின்றன.பொள்ளாச்சி நகராட்சியில், 7,907 ஆள் இறங்கும் தொட்டிகளில், 6,660 தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. மொத்தம், 191 கி.மீ., நீளத்தில் குழாய் பதிப்பதில், 128 கி.மீ.,க்கு குழாய் பதிக்கப்பட்டுள்ளன. திட்டத்தில், 16,050 வீட்டு இணைப்புகளில்; 11,905 இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.கழிவுநீர் உந்துநிலையம், சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கட்டுமான பொருட்களுக்கான வரி உயர்வு போன்ற காரணங்களால், கூடுதலாக, 60 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என அரசுக்கு அதிகாரிகள் கருத்துரு அனுப்பினர். முதற்கட்டமாக, 30 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கூறுகையில், 'நெடுஞ்சாலைத் துறை ரோடுகளில், குழி தோண்டி பாதாள சாக்கடை அமைக்க இரண்டு கோடி ரூபாய் கேட்டனர்; தற்போது, 12 கோடி ரூபாய் கேட்கின்றனர்.கட்டுமான பொருட்களுக்கான விலை உயர்வு போன்ற காரணங்களினால், திட்டம் முழுமையாக முடிக்க நிதி கோரப்பட்டது. முதற்கட்டமாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விரைவில், அடுத்த கட்ட நிதியும் கிடைக்க உள்ளதால், பணிகளில் இடையூறு ஏற்படாது,' என்றனர்.மதிப்பீடு உயர்ந்ததுபாதாள சாக்கடை திட்டத்தின் மதிப்பு, 109.62 கோடியில் இருந்து, 169 கோடியாக உயர்ந்துள்ளது. இதுவரை மேற்கொள்ளப்பட்ட பணிகள் தரமின்றி உள்ளது. கூடுதல் நிதி பெறப்பட்டுள்ள நிலையில், பணிகளின் தரத்தை இனிமேலாவது அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.மேலாண்மை இயக்குனர் ஆய்வுபணிகளை குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குனர் மகேஸ்வரன், பொறியியல் இயக்குனர் சந்திரசேகர் ஆகியோர் ஆய்வு செய்தனர்.முதற்கட்டமாக, நகராட்சி அலுவலகத்தில் கமிஷனர் கண்ணன், பொறியாளர் முருகேசன், குடிநீர் வடிகால் வாரிய தலைமை பொறியாளர் பாலசுப்ரமணியம் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடந்தது. அதன் பின், வெங்கடேசா காலனி, மகாலிங்கபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பணியை ஆய்வு செய்தனர்.மேலாண்மை இயக்குனர் கூறுகையில், ''பொள்ளாச்சி நகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணி, 68 சதவீதம் நிறைவடைந்துள்ளது. பணிகள் நிறைவு பெற்ற இடங்களில், ரோடு அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X