தேங்காய் விலை உயர்வு எதிரொலி: முடங்கியது கொப்பரை உற்பத்தி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தேங்காய் விலை உயர்வு எதிரொலி: முடங்கியது கொப்பரை உற்பத்தி

Added : டிச 09, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

நெகமம்:வட மாநிலங்களில் தேங்காய் விலை அதிகரிப்பால், அடுத்த மூன்று மாதங்களுக்கு கொப்பரை உற்பத்தி இருக்காது என, உற்பத்தியாளர்கள் திட்டவட்டமாக தெரிவித்தனர்.பொள்ளாச்சி, நெகமம் மற்றும் ஆனைமலை பகுதியில், தென்னை சாகுபடி பரப்பு அதிகம் உள்ளது. இதனால், மாநிலத்தின் தேங்காய் உற்பத்தியில், பொள்ளாச்சி பகுதி, 60 சாதவீதம் பூர்த்தி செய்கிறது. தற்போது, தேங்காய் உற்பத்தி குறைந்துள்ள நிலையில், கொப்பரை உற்பத்தி முடங்கியது.நெகமம் சுற்றுப்பகுதியில், 10 சதவீதம் கொப்பரை மட்டுமே உற்பத்தியாகிறது. பெரும்பாலான, உற்பத்தி மையங்களில் இருந்து, ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு திரும்பி விட்டனர்.பொள்ளாச்சி பகுதியில் உற்பத்தியாகும் தேங்காய், நேரடியாக கேரளாவுக்கும், வடமாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. கொப்பரை வர்த்தகத்தை விட, தேங்காய்க்கு கூடுதல் விலை கிடைக்கிறது.கடந்த சில நாட்களாக, கொப்பரை கிலோ, 95 - 96 ரூபாய்க்கு விற்றது. இரு நாட்களில் திடீரென கிலோ, 100 ரூபாயை தொட்டது. தேங்காய் நேரடியாக உணவு தேவைக்கு விற்பனையாவதாலும், கொப்பரை உற்பத்தி இல்லாததாலும், கொப்பரை விலை உயர துவங்கியுள்ளது.நேற்றைய நிலவரப்படி, காங்கயம் மார்க்கெட்டில், ஒரு டன் தேங்காய் (பச்சை), 31,500 - 32 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையானது. கருப்பு ரக தேங்காய், 33 ஆயிரத்துக்கு விற்பனையானது.தமிழ்நாடு தென்னை உற்பத்தியாளர் சங்க உறுப்பினர் தங்கவேல் கூறுகையில், ''தேங்காய் உற்பத்தி சீசன் இல்லாத நிலையில், 'கஜா' புயல் பாதிப்பு காரணமாக மேலும் தட்டுப்பாடு நிலவுகிறது. வட மாநிலங்களில் உணவு தேங்காய்க்கு அதிகளவில் தேங்காய் அனுப்புவதால், பச்சை ரக தேங்காய் விலை அதிகரித்துள்ளது.''தமிழகத்தில், கொப்பரை கிலோவுக்கு, 120 ரூபாய் விலை நிர்ணயித்தால் மட்டுமே, கொப்பரை உற்பத்தியில் கவனம் செலுத்துவார்கள். அதனால், வரும் மூன்று மாதங்களுக்கு தமிழகத்தில் கொப்பரை உற்பத்தி இருக்காது'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X