குடிநீருக்காக பரிதவிக்கும் பள்ளி மாணவர்கள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

குடிநீருக்காக பரிதவிக்கும் பள்ளி மாணவர்கள்

Added : டிச 09, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

வருஷநாடு:வருஷநாடு அருகே வாய்க்கால்பாறை அரசு மேல்நிலைப்பள்ளியில் குடிநீர் வசதியில்லாததால் மாணவர்கள் , ஆசிரியர்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.வாய்க்கால்பாறை, ஆத்துக்காடு, பாம்பாடும்பாறைபுதுார், ஆட்டுப்பாறை, உப்புத்துறை உள்ளிட்ட கிராமங்களில் இருந்து 600க்கும் மேற்பட்ட மாணவர்கள் , வாய்க்கால்பாறை அரசு மேல்நிலைப்பள்ளியில் படிக்கின்றனர். கிராமத்தில் இருந்து ஒரு கி.மீ., துாரத்தில் அமைந்துள்ளது. முறையான ரோடு வசதி இல்லாமல் கரடு முரடான பாதைகளில் மாணவர்கள் நடந்து செல்கின்றனர். சுற்றுச்சுவர் இல்லாததால் கால்நடைகள் தாராளமான வந்து செல்கின்றன. 'போர்வெல்' வறண்டதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. குடிநீருக்காக மாணவர்கள், ஆசிரியர்கள் தோட்டங்களை நோக்கிச் செல்லும் நிலை உள்ளது. பள்ளியில் குடிநீர், ரோடு உள்ளிட்ட அடிப்படை வசதி ஏற்படுத்த மாவட்ட நிர்வாகம், கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X