தப்பி ஓடிய கைதி பஸ் மோதி பலி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தப்பி ஓடிய கைதி பஸ் மோதி பலி

Added : டிச 09, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திண்டிவனம், திண்டிவனம் அருகே, போலீஸ் காவலில் இருந்து தப்பி ஓடிய விசாரணை கைதி, ஆம்னி பஸ் மோதி இறந்தார்.திருவண்ணாமலை மாவட்டம், போளூரைச் சேர்ந்தவர் சிவஞானம், 34; இவர், ஒரு பெண்ணை படம் பிடித்து மிரட்டிய வழக்கில், செங்கல்பட்டு நகர போலீசார் தேடி வந்தனர். நேற்று முன்தினம் இரவு, செங்கல்பட்டு ஏட்டுகள் சுதாகர், திருமால் அடங்கிய குழுவினர், சிவஞானத்தை, மதுரையில் கைது செய்து, வேனில் அழைத்து வந்தனர்.நேற்று அதிகாலை, 4:30 மணிக்கு, திண்டிவனம் - சென்னை பை - பாஸ் சாலையில், சலவாதி அருகேயுள்ள, 'புட் பேரடைஸ்' ஓட்டல் சந்திப்பில், வேனை நிறுத்திய போலீசார், சிவஞானத்தை இயற்கை உபாதை கழிக்க, கீழே இறக்கி விட்டனர்.சிவஞானம், போலீசாரிடமிருந்து தப்பிக்க, புறவழிச் சாலையில் ஓடிய போது, திருச்சியில் இருந்து சென்னை சென்ற ஆம்னி பஸ் மோதி, நிற்காமல் சென்றது. தலையில் படுகாயம் அடைந்த சிவஞானத்தை, போலீசார் மீட்டு, திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.மேல் சிகிச்சைக்காக, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், காலை, 10:30 மணிக்கு இறந்தார். ரோஷனை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X