வறட்சியில் தடுப்பணைகள் பி.ஏ.பி., தண்ணீர் எதிர்பார்ப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வறட்சியில் தடுப்பணைகள் பி.ஏ.பி., தண்ணீர் எதிர்பார்ப்பு

Added : டிச 09, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

நெகமம்:நெகமம் பேரூராட்சிக்கு உட்பட்ட, ஐந்து கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த, ஒன்பது தடுப்பணைகளுக்கு பி.ஏ.பி., நீர் விட்டு நிரப்ப வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.நெகமம் பேரூராட்சிக்கு உட்பட்ட சின்னேரிபாளையம், காளியப்பம்பாளையம், ரங்கம்புதுார், நெகமம் மற்றும் எம்.ஜி.ஆர்.நகர் சுற்றுப்பகுதியில், தென்னை சாகுபடி பிரதானமான விவசாயமாக உள்ளது.பெரும்பாலும், கிணற்று பாசனம் மற்றும் பி.ஏ.பி., திட்டத்தில் கிடைக்கும் நீரை கொண்டு பாசனம் நடக்கிறது. கடந்த மூன்று ஆண்டு காலம் நிலவிய, கடும் வறட்சியால் தென்னை மரங்கள் காய்ப்பை இழந்துள்ளன.தென்மேற்கு பருவமழை, பொள்ளாச்சி, கிணத்துக்கடவு பகுதியில் பலமாக பெய்தது போன்று, நெகமம் பகுதியில் தீவிரமடையவில்லை. இதனால், மற்ற பகுதிகளில் நீர்மட்டம் உயர்த்த அளவுக்கு நெகமம் சுற்றுப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயரவில்லை.இதனால், நீர் பாசனம் இன்றி தென்னை மரங்கள் மீண்டும் வறட்சியை சந்தித்துள்ளன. இந்நிலை மாற, நெகமம் பேரூராட்சிக்கு உட்பட்ட கிராமங்களில் உள்ள, ஒன்பது தடுப்பணைகளில், பி.ஏ.பி., நீரை விட்டு நிரப்ப வேண்டும்.பி.ஏ.பி., கால்வாயில் வரும் தண்ணீரை, என்.சந்திராபுரத்தில் இருந்து சிற்றோடை வழியாக நெகமம் பகுதிக்கு திறக்க வேண்டும். அதற்கு முன், தடுப்பணைகளை ஆக்கிரமித்துள்ள புதர்களை அகற்றி, ஆழப்படுத்த அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X