அரசு மருத்துவமனையில் மா.கம்யூ., ஆர்ப்பாட்டம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அரசு மருத்துவமனையில் மா.கம்யூ., ஆர்ப்பாட்டம்

Added : டிச 09, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ஆனைமலை:ஆனைமலை அடுத்த வேட்டைக்காரன்புதுார் அரசு மருத்துவமனையில், மா.கம்யூ., கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.ஆனைமலை அடுத்த வேட்டைக்காரன்புதுார் அரசு மருத்துவமனை முன் நேற்று, மா.கம்யூ., ஆர்ப்பாட்டம் நடந்தது.அப்போது, '24 மணி நேரமும் மருத்துவமனையில் டாக்டர் இருக்க வேண்டும். தினமும், மூன்று டாக்டர்கள் பணியில் இருக்க வேண்டும்.சித்த மருத்துவமனைக்கு நிரந்தரமாக டாக்டர் மற்றும் மருந்தாளுனர் நியமிக்க வேண்டும். ரத்த பரிசோதனை மையம் தினமும் செயல்பட வேண்டும். சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி ஏற்படுத்த வேண்டும்,' என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். அதன்பின், மருத்துவ அலுவலர் அழகப்பசாமியிடம் கோரிக்கைகளை வலியுறுத்தி மனு கொடுத்தனர். அப்போது, ''மருத்துவமனையில் நிலவும் பிரச்னைகள் குறித்து, உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்படும். விரைவில், நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, மருத்துவ அலுவலர் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X