புயல் பாதித்த இடங்களில் மண் சோதனை அவசியம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

புயல் பாதித்த இடங்களில் மண் சோதனை அவசியம்

Added : டிச 09, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கோவை:''கஜா புயல் பாதித்த பகுதிகளில் விவசாயிகள் மண் வள பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்,'' என, மதுரை வேளாண் ஆராய்ச்சி நிலைய முன்னாள் டீன் கிருஷ்ணமூர்த்தி அறிவுறுத்தினார்.வேளாண் பல்கலை மண் அறிவியல் துறை சார்பில், உலக மண் தின சிறப்பு கருத்தரங்கு நடந்தது; துணைவேந்தர் குமார் தலைமை வகித்தார்.மதுரை வேளாண் ஆராய்ச்சி நிலைய முன்னாள் டீன் கிருஷ்ணமூர்த்தி பேசியதாவது:கஜா புயல் பாதித்த இடங்களில், வளமான மேலடுக்கு மண் அரித்துச் செல்லப்பட்டிருக்க வாய்ப்புள்ளதால், அதன் வளம் குறையும். புயல் பாதித்த பகுதிகளில் விவசாயிகள்மண் பரிசோதனை செய்தால், வளத்தை அறியலாம். எவ்வித பாதிப்பில் இருந்தும், அதன் வளத்தை மீட்டெடுக்க முடியும். பசுந்தாள் உரம், தொழு உரம், மண் புழு உரம் போன்ற இயற்கை இடுபொருட்களை பயன்படுத்தினால், மண்ணின் வளத்தை மேம்படுத்தலாம்.கஜா புயலில் தென்னை மரங்கள் வேரோடு சாய்ந்ததற்கு மண்ணில் உறுதித்தன்மை இல்லாதது காரணமல்ல. அம்மரத்துக்கு ஆணிவேர் இல்லாததால், சல்லிவேர்கள் புயலை தாக்குப்பிடிக்காமல் சாய்ந்துள்ளன. இயற்கை இடுபொருட்கள் பயன்படுத்துவன் மூலம் மண்ணின் பவுதீக, ரசாயன, உயிரியல் பண்புகள் மேம்பட்டு, உறுதித்தன்மை பாதுகாக்கப்படும். பயிர்களின் வேர்ப்பிடிப்பு திறன் அதிகரிக்கும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X