இரண்டு குழந்தைகளை கொலை செய்தது ஏன்? கைதான தந்தை போலீசில் வாக்குமூலம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இரண்டு குழந்தைகளை கொலை செய்தது ஏன்? கைதான தந்தை போலீசில் வாக்குமூலம்

Added : டிச 09, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

கோவை:இரண்டு குழந்தைகளை கழுத்தை நெரித்து கொன்ற தந்தையை போலீசார் கைது செய்தனர். மாமியார் - மருமகள் தகராறே குழந்தைகளை கொலை செய்யும் அளவுக்கு கொண்டு சென்றதாக போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார்.கோவை, மசக்காளிப்பாளையம், நீலிக்கோனார் வீதியை சேர்ந்தவர் பத்மநாபன், 47. சவுரிபாளையத்தில் உள்ள தனியார் மார்க்கெட்டிங் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி செல்வராணி. இவர்களுக்கு ஹேமவர்ஷினி, 15, ஸ்ரீஜா, 8 என, இரண்டு மகள்கள் இருந்தனர். இருவரும் தனியார் பள்ளியில், 10 மற்றும் 3ம் வகுப்பு படித்து வந்தனர்.நேற்று முன்தினம் இரண்டு மகள்களின் கழுத்தையும் நெரித்து கொலை செய்த பத்மநாபன், தப்பியோடினார். அவரை சிங்காநல்லுார் போலீசார் கைது செய்து விசாரித்தனர்.விசாரணையில் போலீசாரிடம் பத்மநாபன் கூறியதாவது:நான் மாத சம்பளத்தை வாங்கி வீட்டில் எனது மனைவியிடம் கொடுத்து விடுவேன். வீட்டில் எப்போதும் எனது தாய் பிரேமா மற்றும் மனைவி இடையே தகராறு இருந்து வரும். ஒருவரை ஒருவர் தினமும் திட்டி கொண்டு சண்டை போட்டு வந்தனர். இதனால், வாழ்வில் விரக்தி ஏற்பட்டது. எப்போதும் ஒருவித அச்சத்துடனே, வாழ்வை ஓட்டி வந்தேன்.மனைவிக்கு பக்கவாத நோய் ஏற்பட்டது. எனக்கும் கடன் பிரச்னை ஏற்பட்டு அவதியடைந்து வந்தேன். ஒட்டுமொத்தமாக இந்த பிரச்னையில் இருந்து விடுபட அனைவரையும் கொலை செய்துவிட்டு, தற்கொலை செய்ய எண்ணினேன். அதற்கு ஏற்றதுபோல், இரண்டு நாட்களுக்கு முன் இரவு வீட்டில் தாய் - மனைவி இடையே பிரச்னை ஏற்பட்டது.கோபத்தில் இருவரையும் சரமாரியாக அடித்து உதைத்தேன். இதனால், மனைவியின் உறவினர்கள் வந்து அவரை பெற்றோர் வீட்டுக்கு அழைத்து சென்றுவிட்டனர். எனது தாய் பக்கத்து வீட்டுக்கு சென்று தங்கிவிட்டார். இரண்டு மகள்கள் மட்டும் அவர்களுடன் செல்லாமல் என்னுடனே இருந்தனர்.இவர்கள் இருவரிடமும் மகள்களை விட்டு செல்லக் கூடாது என்று அவர்கள் துாங்கியபோது, கழுத்தை துப்பட்டாவால் நெரித்து கொன்றுவிட்டு, நானும் துாக்கிட்டு தற்கொலை செய்ய முயன்றேன். அப்போது எனது தாய் வீட்டுக்குள் வந்ததால், அங்கிருந்து தப்பியோடினேன். என்ன செய்வது என்று தெரியாமல் ரோட்டில் சுற்றி திரிந்தபோது கைது செய்யப்பட்டேன்.இவ்வாறு, அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.போலீசார் கூறுகையில், 'கைதான பத்மநாபன் சற்று மனசிதைவுடன் இருக்கிறார். அவருக்கு பெரிய அளவில் கடன் தொல்லை எதுவும் இல்லை. வீட்டில் ஏற்பட்டு வந்த தொடர் பிரச்னை காரணமாக இரண்டு குழந்தைகளை கொலை செய்யும் அளவுக்கு சென்றுள்ளார். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகிறோம்' என்றனர்.மாமியார் - மருமகள் சண்டை, இறுதியில் இரண்டு குழந்தைகளின் கொலையில் முடிந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X