தீப்பற்றி எரிந்த கார் போக்குவரத்து பாதிப்பு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தீப்பற்றி எரிந்த கார் போக்குவரத்து பாதிப்பு

Added : டிச 09, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கடலுார், பரங்கிப்பேட்டை அருகே, தேசிய நெடுஞ்சாலையில் சென்ற கார், திடீரென தீப்பற்றி எரிந்ததால், 15 நிமிடங்கள், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.கடலுார் மாவட்டம், பரங்கிப்பேட்டையைச் சேர்ந்தவர் செந்தில்குமார், 45; முன்னாள் கவுன்சிலர். இவர், தன் இண்டிகா காரை, நேற்று, பு.முட்லுாரில் உள்ள மெக்கானிக் ஷாப்பில் சர்வீஸ் செய்தார்.காலை, 10:30 மணிஅளவில், டிரைவர் ஷேக் இஸ்மாயில், டீசல் போடுவதற்காக, புதுச்சத்திரம் சென்றார். சின்னகுமட்டி அருகே சென்றபோது, கார் இன்ஜினில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. ஷேக் இஸ்மாயில், காரை சாலையோரம் நிறுத்தி, இறங்கி பார்ப்பதற்குள், மளமளவென கார் முழுவதும் எரிந்தது.தகவலறிந்து வந்த பரங்கிப்பேட்டை போலீசார் மற்றும் தீயணைப்பு நிலைய வீரர்கள், தீயை அணைத்தனர். இதனால், கடலுார் - சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில், 15 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X