நியமன எம்.எல்.ஏ.,க்கள் வழக்கு தீர்ப்பு சீராய்வு மனு செய்ய புதுவை அரசு முடிவு| Dinamalar

நியமன எம்.எல்.ஏ.,க்கள் வழக்கு தீர்ப்பு சீராய்வு மனு செய்ய புதுவை அரசு முடிவு

Added : டிச 09, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

புதுச்சேரி, ''புதுச்சேரியில், நியமன, எம்.எல்.ஏ.,க்கள் விவகாரம் தொடர்பான, உச்ச நீதிமன்ற தீர்ப்பில் நிறைய ஓட்டை உள்ளது. இத்தீர்ப்பு குறித்து, சட்ட வல்லுனர்களுடன் கலந்தாலோசித்து, சீராய்வு மனு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கூறினார்.அவரது பேட்டி:புதுச்சேரி சட்டசபை, வரும், 14ம் தேதி கூடுகிறது. இதில், மேகதாதுவில் அணை கட்டவுள்ள கர்நாடக அரசு, இடைக்கால அனுமதி அளித்த மத்திய அரசை கண்டித்து, தீர்மானம் நிறைவேற்ற உள்ளோம்.புதுச்சேரி நியமன, எம்.எல்.ஏ.,க்கள் தொடர்பாக, முதல்வரின் பாராளுமன்ற செயலர் லட்சுமி நாராயணன், தாக்கல் செய்த வழக்கை, உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.இத்தீர்ப்பு குறித்து, சட்ட வல்லுனர்களுடன் கலந்து பேசி, உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்ய, நடவடிக்கை எடுக்கப்படும்.ஜனநாயகத்தில், மக்கள் பிரதிநிதிகளுக்குத் தான் முழு அதிகாரம். உச்ச நீதிமன்ற தீர்ப்பை விமர்சனம் செய்ய உரிமை உண்டு. தேர்தலில் மனு தாக்கல் செய்யும் போது, அவர்களின் குற்றப் பின்னணி, சொத்து விபரம், கடன் விபரம் போன்றவை கொடுக்கப்படும்.நியமன, எம்.எல்.ஏ.,க்கள் விவகாரத்தில் அதுபோல் இல்லை. எனவே, குற்றப் பின்னணி, சொத்து, கடன் விபரங்களை தேர்தல் ஆணையத்திற்கு கொடுக்காதவர்கள், எம்.எல்.ஏ.,க்களாக கருதப்பட மாட்டார்கள். உச்சநீதிமன்ற தீர்ப்பில் நிறைய ஓட்டை உள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X