நெல்லை சிறுவர்கள் காப்பகத்தில் இருந்து 7 பேர் தப்பியோட்டம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நெல்லை சிறுவர்கள் காப்பகத்தில் இருந்து 7 பேர் தப்பியோட்டம்

Updated : டிச 09, 2018 | Added : டிச 09, 2018 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
நெல்லை,சிறுவர்கள் காப்பகம், தப்பியோட்டம்

திருநெல்வேலி:நெல்லை சந்திப்பில் உள்ள சிறுவர் காப்பகத்தில் இருந்து 7 சிறுவர்கள் நள்ளிரவில் ஜன்னலை உடைத்து தப்பி ஓட்டம். சந்திப்பு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நெல்லை சந்திப்பில் சரணாலயம் என்று அழைக்கப்படும் ஆதரவற்றோர் குழந்தைகள் காப்பகம் செயல்படுகிறது. இது சைல்டு லைன் அமைப்புடன் இணைந்து செயல்படுகிறது. இந்த சரணாலயத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மீட்கப்படும் ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் உதவி தேவைப்படும் குழந்தைகள், சைல்டு லைன் மூலம் மீட்கப்படும் குழந்தைகள், தாய்,தந்தையின்றியும், குடும்ப சூழ்நிலை காரணமாகவும் தனித்து விடப்பட்ட சில குழந்தைகள் என 50க்கும் மேற்பட்ட குழந்தைகள் சரணாலயத்தில் வாழ்கின்றனர். இந்த நிலையில் நள்ளிரவில் இந்த காப்பகத்தில் உள்ள ஜன்னலை உடைத்து 7 சிறுவர்கள் தப்பி சென்றனர். காப்பகத்தில் இருந்து தப்பியோடிய 7 சிறுவர்களும் கடந்த சில நாட்களுக்கு முன் குழந்தை தொழிலாளர்களாக மீட்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருபவர்கள். இந்த சம்பவம் குறித்து நெல்லை சந்திப்பு காவல் துறையினர் சிறுவர்கள் எங்கு சென்று உள்ளனர் என பேருந்து நிலையம், ரயில் நிலையம் அவர்களது சொந்த ஊர் ஆகிய இடங்களில் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
09-டிச-201814:05:03 IST Report Abuse
தமிழ்வேல் அங்கு சுதந்திரமாக அல்லது திருப்திகரமாக இல்லை என்று நிரூபணம் ஆகின்றது.
Rate this:
Share this comment
Cancel
தமிழ் மைந்தன் - Dindigul India,இந்தியா
09-டிச-201808:42:37 IST Report Abuse
தமிழ் மைந்தன் இவர்களின் உறுப்பினர்கள் அட்டைகளை உடனே ஊழல் கட்சி திரும்ப பெற வேண்டும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X