கணவர் மாயம்: போலீசில் மனைவி புகார்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கணவர் மாயம்: போலீசில் மனைவி புகார்

Added : டிச 09, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கோபிசெட்டிபாளையம்: கோபி அருகே, சலவைத்தொழிலாளி மாயமானதாக, மனைவி பங்களாப்புதூர் போலீசில் புகார் தெரிவித்துள்ளார். கோபி அருகே, கள்ளிப்பட்டியை சேர்ந்தவர், சண்முகமூர்த்தி, 42. சலவைத்தொழிலாளி. இவர், கடந்த நவம்பர், 14ல், கோபியில் உள்ள உறவினர் வீட்டு விசேஷத்துக்கு, டி.வி.எஸ்., எக்சல் மொபட்டில் சென்றார். பின்னர் அவர், வீடு திரும்பவில்லை. அவரை தொடர்பு கொண்டபோது, செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. அவரை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. சண்முகமூர்த்தி ஓட்டிச்சென்ற, மொபட் சிறுவலூர் அருகே, வாய்க்கால் கரை ஓரத்தில் நின்றிருந்தது. சண்முகமூர்த்தியின் மனைவி தங்கமணி, புகாரின்படி, பங்களாப்புதூர் போலீசார், வழங்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X