மேகதாதுவால் தமிழகத்திற்கே பலன் : கர்நாடக அமைச்சர்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

மேகதாதுவால் தமிழகத்திற்கே பலன் : கர்நாடக அமைச்சர்

Updated : டிச 09, 2018 | Added : டிச 09, 2018 | கருத்துகள் (29)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
மேகதாது, கர்நாடகா அமைச்சர், சிவக்குமார், தமிழகம், காவிரி

சென்னை : மேகதாது அணையால் தமிழகத்திற்கே பலன் கிடைக்கும் என கர்நாடக நீர்பாசனத்துறை அமைச்சர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக - கர்நாடக மக்கள் சகோதரர்கள். இரு மாநில மக்களும் சண்டையிடுவதை நாங்கள் விரும்பவில்லை. மேகதாது அணை கட்டுவதற்காக அனுமதியை மத்திய அரசு அனுமதி அளிக்கவில்லை. மேகதாது அணை விவகாரத்தில் விரிவான அறிக்கை தயாரிக்க மட்டுமே மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. மேகதாது அணை கட்டுவதால் கர்நாடகாவை விட தமிழகத்திற்கே பலன் அதிகம். அணை கட்டுவதற்கான திட்டம் வகுத்த பிறகு, தமிழகம் அதை புரிந்து கொள்ளும் என நம்புகிறோம். இரு மாநிலங்களும் பயன்படுத்தாமல் கடலில் வீணாகும் நீரை சேமிக்கவே அணை கட்டுகிறோம். இந்த அணை கட்டப்பட்டால் 67 டிஎம்சி தண்ணீர் சேமிக்க முடியும்.

கர்நாடக மக்களுக்கு குடிநீர் தரவேண்டியது எங்கள் கடமை. அதனால் மேகதாதுவில் அணை கட்டுவதில் உறுதியாக உள்ளோம். மேகதாது எல்லை பகுதியில் அணை அமைய உள்ளது. அணை கட்டுவதற்கு கர்நாடகாவை சேர்ந்த 6 கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறப்படுவதில் உண்மை இல்லை. அணை கட்டுவதற்கு ஒட்டுமொத்த கர்நாடக மக்களும் ஆதரவாக இருப்பார்கள். அணை குறித்து விரிவாக ஆலோசிப்பதற்கே தமிழக முதல்வரை சந்திக்க நேரம் கேட்டுள்ளோம். இதுவரை எந்த பதிலும் கிடைக்கவில்லை. தமிழகத்துடன் சண்டை போட விரும்பவில்லை. காவிரி விவகாரத்தில் இன்னும் எத்தனை ஆண்டுகள் சண்டை போட முடியும்.

மேகதாதுவில் உடனடியாக அணை கட்டி விட முடியாது. அதற்கு ஏராளமான நடைமுறைகள் உள்ளன. காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை மீறி கட்டுமான பணிகள் எதையும் மேற்கொள்ள மாட்டோம். அனைத்து நடைமுறைகளும் முறையாக பின்பற்றி, அனுமதி பெற்ற பிறகே கட்டுமான பணிகள் துவங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (29)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
JeevaKiran - COONOOR,இந்தியா
10-டிச-201810:55:37 IST Report Abuse
JeevaKiran அவங்களுக்கு அவங்க மக்கள் மீது அக்கறை உள்ளதால் அணை கட்டுகிறார்கள். நம்மை ஆள்பவர்களுக்கு அந்த அக்கறை உள்ளதா? பாலாறு 280 கி.மீ. தமிழகத்தில் ஓடுகிறது. ஒரு அணையாவது உண்டா? ஆந்திராவில் மொத்தமே 29 கி.மீ. நீளம் தான். அதில் 25 அணைகள் உள்ளன. இதற்கு என்ன பதில்?
Rate this:
Share this comment
Cancel
Raghuraman Narayanan - Machester,யுனைடெட் கிங்டம்
09-டிச-201819:31:41 IST Report Abuse
Raghuraman Narayanan ஒரு ஆணியும் வேண்டாம்.
Rate this:
Share this comment
Cancel
jagan - Chennai,இந்தியா
09-டிச-201818:39:13 IST Report Abuse
jagan சரியாய் தான் சொல்லிருக்கார்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X