ஆட்டோ மீது லாரி மோதல்: டிரைவர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆட்டோ மீது லாரி மோதல்: டிரைவர் கைது

Added : டிச 09, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

நாமக்கல்: ஷேர் ஆட்டோ மீது, லாரி மோதிய விபத்தில், மூன்று பேர் படுகாயம் அடைந்தனர். நாமக்கல்லில் இருந்து கலெக்டர் அலுவலகம் நோக்கி, ?ஷர் ஆட்டோ, நேற்று மதியம், 12:30 மணிக்கு சென்றது. நாமக்கல்லை சேர்ந்த, கண்ணன், 40, ஓட்டினார். அதேபோல், நாமக்கல்லில் இருந்து திருச்செங்கோடு நோக்கி லாரி ஒன்று சென்றது. பாப்பிநாயக்கன்பட்டியை சேர்ந்த மாயவன், 40, ஓட்டி சென்றார். கலெக்டர் அலுவலகம் எதிரே பயணிகளை இறக்கிவிட்டு சென்ற, ?ஷர் ஆட்டோ மீது, லாரி மோதியது. இந்த விபத்தில், ஆட்டோ, சாலையில் நின்றிருந்த கம்பங்கூழ் கடை மீது மோதி கவிழ்ந்தது. அதில், உத்தமபாளையத்தை சேர்ந்த கம்பங்கூழ் கடைக்காரர் செல்வமணி, 40, அங்கு நின்றிருந்த கிருஷ்ணாபுரம் பெரியசாமி, 60, அரச்சலூர் கருமலை, 63 ஆகியோர் படுகாயமடைந்தனர். அவர்கள், நாமக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். நல்லிபாளையம் போலீசார், மாயவனை கைது செய்து, விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X