Advertisement
கைத்தறி நெசவாளர்களுக்கு "கை' கொடுப்பார்களா: தொடரும் புறக்கணிப்பால் அதிருப்தி
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

01 ஏப்
2011
22:46

பொள்ளாச்சி : நெசவாளர்களின் பிரச்னைகள் குறித்து, அரசுகள் கண்டு கொள்ளாததால், இத்தொழிலில் ஈடுபட்டுள்ளோர், அதிருப்தியடைந்துள்ளனர்.


தமிழகத்தில், காஞ்சிபுரம், ஈரோடு, சேலம், அருப்புக்கோட்டை, பழநி, திண்டுக்கல், ராமநாதபுரம், காரைக்குடி, கோவை, சிறுமுகை உட்பட பகுதிகளில், கைத்தறி நெசவுத் தொழில் பிரதானமாக உள்ளது.தொழிலை மேம்படுத்த, நெசவாளர்கள் தரப்பில், அரசுக்கு பல கோரிக்கைகள் வைக்கப்பட்டும், இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. கைத்தறி நெசவாளர்களுக்காக, அரசால் அறிவிக்கப்படும் திட்டங்கள், உரிய காலத்தில் நடைமுறைப்படுத்தாததால், வெறும் அறிவிப்புகளாக மட்டுமே உள்ளன என, நெசவாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.கூட்டுறவு சங்கங்களிலிருந்து பெற்ற கடனை, முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது, நெசவாளர்களின் கோரிக்கைகளுள் ஒன்று. இதற்கு ஏதுவாக, மத்திய பட்ஜெட்டில், கைத்தறி நெசவு கூட்டுறவு சங்க கடன் தள்ளுபடி செய்வதாக அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு, உடனடியாக நடைமுறைக்கு வந்தால் மட்டுமே, நெசவாளர்கள் பயனடைய முடியும் என்ற நிலையுள்ளது.முக்கிய கோரிக்கைகள்: கைத்தறி தொழிலை மேம்படுத்த, இலவச மின்சாரம் வழங்க வேண்டும்; நெசவாளர்களுக்கான கூலியை ஒரே சீராக நிர்ணயிக்க, மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்; போனஸ் வழங்க வேண்டும்; கோ-ஆப்டெக்சை மேம்படுத்தி, நெசவாளர்கள் விற்பனை செய்யும் கைத்தறிகளுக்கு, உடனுக்குடன் பணம் பட்டுவாடா செய்ய வேண்டும்; நூல்களின் விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது, இவர்களின் முக்கிய கோரிக்கைகளாக உள்ளன.


மாற்றுத் தொழிலில் 50 சதவீதம்! கைத்தறி நெசவாளர் சங்க, கோவை மாவட்ட முன்னாள் துணைத் தலைவர் சிவலிங்கம் கூறியதாவது:மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி அமைக்கும் அரசுகளிடம், கைத்தறி நெசவாளர்களின் கோரிக்கைகள் வலியுறுத்தப்படுகிறது; செவி மடுக்காததால், நெசவாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கூட்டுறவு சங்க கடனை முழுமையாக தள்ளுபடி செய்தால், சங்கங்கள் மீண்டும் உயிர் பெறும். கைத்தறி நெசவை மட்டும் நம்பியுள்ள மக்களின் வாழ்க்கையும் மேம்படும். தொழில் நலிவடைந்ததால், கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும், 50 சதவீதம் பேர், மாற்றுத் தொழிலுக்கு சென்றுள்ளனர்.
அறிவிக்கப்படும் சலுகைகள், முறையாக வந்திருந்தால், நெசவாளர்களின் குடும்பம் மேம்பட்டிருக்கும். நெசவாளர்களின் வாழ்க்கை புத்துயிர் பெற, மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, சிவலிங்கம் தெரிவித்தார்.





Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.