தடை செய்யப்பட்ட பொருள்கள் கொண்டு செல்பவர்கள் மீது...நடவடிக்கை | Dinamalar

தமிழ்நாடு

தடை செய்யப்பட்ட பொருள்கள் கொண்டு செல்பவர்கள் மீது...நடவடிக்கை

Added : ஏப் 14, 2011
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement


ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்தூர் செண்பகதோப்பு காட்டழகர் கோயிலுக்கு வரும் பக்தர்கள், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக், பெட்ரோல் போன்ற பொருள்களை கொண்டு செல்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறை எச்சரித்துள்ளது. ஸ்ரீவி., வனப்பகுதி சாம்பல் நிற அணில்களின் சரணாலயமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கு ஆண்டாள் கோயிலுக்கு சொந்தமான காட்டழகர் கோயில், செண்பகதோப்பில் பேச்சியம்மன் கோயில் உள்ளன. ஏப்.17ல் சித்ரா பவுர்ணமியையொட்டி விருதுநகர், தூத்துக்குடி, மற்றும் மதுரை மாவட்ட பக்தர்கள் காட்டழகர் கோயிலுக்கு வந்து செல்வர். இவர்கள் ஒரு நாள் முழுவதும் தங்கியிருந்து சமைத்து சாப்பிடுவது வழக்கம். இவர்கள் கொண்டு வரும் பாலிதீன் பொருட்களால் வனவிலங்குகள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. மேலும் பக்தர்கள் சமைப்பதற்காக வனப்பகுதியிலுள்ள காய்ந்து போன மரக்குச்சிகளை பயன்படுத்துவது வழக்கம். இதனால் வனத்துறையினர் வனப்பகுதியில் திறந்தவெளியில் சமைப்பதற்கும், மரக்குச்சிகளை பயன்படுத்தவும், பாலிதீன் பைகளை கொண்டு செல்ல தடை விதித்துள்ளது. வன அதிகாரி பழனிராஜ் கூறியதாவது: தடை செய்யப்பட்ட பொருட்களை கொண்டு வருவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். சமைப்பதற்காக மரக்குச்சிகள் எடுப்பவர்கள் மீது வழக்கு தொடரப்படும். சமைப்பதற்கான அனுமதிக்கப்பட்ட இடத்தில் மட்டுமே சமையல் செய்ய வேண்டும். அதற்காக காஸ் சிலிண்டர்களை கொண்டு வர அனுமதி உண்டு. காலை 6 முதல் மாலை 6 மணி வரை மட்டுமே கோயிலில் இருக்க அனுமதிக்கப்படுவர். இரவில் தங்க அனுமதி கிடையாது. தடையை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை