"ஆல்கஹால் பிரித் அனலைசர்' போலீசாருக்கு வழங்கப்படுமா| Dinamalar

தமிழ்நாடு

"ஆல்கஹால் பிரித் அனலைசர்' போலீசாருக்கு வழங்கப்படுமா

Added : ஏப் 14, 2011
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

போடி : குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை கண்டறிய"ஆல்கஹால் பிரித் அனலைசர்' கருவி அனைத்து போலீஸ் ஸ்டேஷனுக்கும் வழங்கப்படும், என அரசு உத்தரவிட்டு பல ஆண்டுகளாகியும், திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. கேரளாவில் குடிபோதையில் வாகனங்கள் ஓட்டுபவர்களை கண்டறியும் "ஆல்கஹால் பிரித் அனலைசர்" கருவி பல ஆண்டுகளுக்கு முன்பே போலீசாருக்கு வழங்கப்பட்டு விட்டது. இந்த கருவியை குடிபோதையில் இருப்பவர்கள் முகத்திற்கு முன் கொண்டு சென்றால் மஞ்சள் நிறத்திலும், அவரால் வண்டி ஓட்ட இயலாது என்றால் சிகப்பு நிறத்திலும், குடிக்காவிட்டால் பச்சை நிறத்திலும் லைட் எரியும். இதன் மூலம் அவர் "போதை மனிதர்' என்பதை கண்டறிந்து போலீசாரால் நடவடிக்கை எடுக்க முடிகிறது. இதனால், குடி போதையில் வாகனங்கள் ஓட்டுவது கேரளாவில் குறைந்துள்ளது. தமிழகத்திலும் அனைத்து போலீஸ் ஸ்டேஷன்களுக்கும் "ஆல்கஹால் பிரித் அனைலைசர்' கருவிகள் வழங்கப்படும், என அரசு உத்தரவிட்டு பல ஆண்டுகளாகியும், இன்னும் திட்டம் நடைமுறைக்கு வரவில்லை. போதையில் வாகன ஓட்டுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதோடு, விபத்துக்களும் தொடர்ந்து ஏற்பட்டு வருகின்றன.



Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை