கல்லங்குறிச்சி கலியபெருமாள் கோவில் தேரோட்டம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கல்லங்குறிச்சி கலியபெருமாள் கோவில் தேரோட்டம்

Added : ஏப் 21, 2011
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

அரியலூர்: அரியலூர் அருகே கல்லங்குறிச்சி கலியபெருமாள் கோவில் தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். அரியலூர் அருகே கல்லங்குறிச்சியில் கலியபெருமாள் கோயில் எனப்படும், கலியுக வரதராஜ பெருமாள் கோயில் உள்ளது. சேலம், நாமக்கல், விழுப்புரம், கடலூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, பெரம்பலூர் மற்றும் அரியலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்ளை சேர்ந்த லட்சக்கணக்கான பொதுமக்களுக்கு, பிரார்த்தனை தலமாக விளங்கும் இக்கோயிலின் பெருந்திருவிழா, கடந்த 12ம் தேதி ஸ்ரீராமநவமியன்று கொடிஏற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து சூரிய வாகனம், புன்னைமர வாகனம், வெள்ளி சேஷ வாகனம், வெள்ளி யானை வாகனம், கண்ணாடி பல்லக்கு, வெள்ளிக் குதிரை வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் ஸ்வாமி திருவீதி உலாவும், 16ம் தேதியன்று கருடசேவையும், 18ம் தேதி திருக்கல்யாண உற்சவமும் நடந்தது. பெருந்திருவிழாவின் முக்கிய திருவிழாவான தேரோட்டம், 20ம் தேதி நேற்று அதிகாலை 5.30 மணிக்கு துவங்கியது. அரியலூர் மாவட்ட கலெக்டர் பொன்னுசாமி, கோயிலின் ஆதீன பரம்பரை தர்மகர்த்தா கோவிந்தசாமி படையாட்சியார், டி.ஆர்.ஓ., பிச்சை, ஆர்.டி.ஓ., ஸ்ரீதரன், தாசில்தார் பாலாஜி தேரோட்டத்தை வடம் பிடித்து தேரோட்டத்தை துவக்கி வைத்தனர். முதல் தேரில் ஆஞ்சநேயரும், இரண்டாவது தேரில் ஸ்ரீதேவி, பூதேவி உடனமர் கலியுக வரதராஜ பெருமாளும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். நான்கு ராஜவீதிகள் வழியாக நடந்த தேரோட்டத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். ஆங்காங்கே அன்னதானமும் நடந்தது. கல்லங்குறிச்சி கலியபெருமாள் கோயில் தேரோட்டத்தை முன்னிட்டு, நூற்றுக்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. தேரோட்டத்தை காணவரும் பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிக்க, அரியலூர் எஸ்.பி., நஜ்முல் ஹோடா உத்தரவுபடி ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X