உயர்கல்வி பெறும் ஏழை மாணவர்களுக்கு 4 சதவீதத்தில் கடனுதவி தர புதிய திட்டம்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

உயர்கல்வி பெறும் ஏழை மாணவர்களுக்கு 4 சதவீதத்தில் கடனுதவி தர புதிய திட்டம்

Added : மே 15, 2010
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

புதுடில்லி : சமூகத்தின் நலிவடைந்த பிரிவில் உள்ள மாணவர்கள் உயர்கல்வி பெறும் வகையில், அவர்களுக்கு 4 சதவீத வட்டியில் கல்விக் கடன் வழங்குவது குறித்து மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது.


உயர்கல்வி பயிலும் மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கு கல்விக் கடன் வழங்குவதற்காக, "தேசிய உயர்கல்வி நிதிக் குழு' (என்.எச்.இ.எப்.சி.,) என்ற அமைப்பை உருவாக்குவது குறித்து மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. இந்த அமைப்பு, உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு கல்விக் கடன் வழங்கும். குறிப்பாக, சமுதாயத்தின் நலிவடைந்த பிரிவில் இருந்து உயர்கல்வி பயில முன்வரும் மாணவர்களுக்கு, 4 சதவீத வட்டியில் கல்விக் கடன் வழங்கவும் முயற்சி எடுக்கும். என்.எச்.இ.எப்.சி., அமைப்பின் உருவாக்கம் குறித்த கொள்கை வரைவுத் திட்டத்தை, மத்திய மனிதவளத்துறை அமைச்சகம் தயாரித்துள்ளது. குறைந்த வட்டியில் நலிவடைந்த பிரிவைச் சேர்ந்த மாணவர்களுக்கு கல்விக் கடன் வழங்குவது தான் இந்த அமைப்பின் முக்கிய நோக்கம். இதன் மூலம் வங்கிகளுக்கு ஏற்படும் இழப்பு ஈடு கட்டப்படும். இந்த அமைப்பை தாராள மனதுடன் உதவி செய்யும் அமைப்பாக உருவாக்க திட்டமிடப்பட்டிருக்கிறது. "நபார்டு' வங்கி போல செயல்படும். அதே சமயம், உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு 7 சதவீத வட்டியில் கடன் உதவி, எவ்வித கடுமையான நிபந்தனைகள் இன்றி 9 சதவீத வட்டி என்றும் தர திட்டம் உள்ளது. இந்த அமைப்பின் உருவாக்கம் குறித்து மத்திய மனிதவளத்துறையும், திட்டக் கமிஷனும் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளன. மனிதவளத்துறை அமைச்சர் கபில் சிபல் கூறுகையில், "4 சதவீத வட்டியில் கல்விக் கடன் வழங்குவது குறித்து திட்டக் கமிஷனுடன் பேசி வருகிறோம். என்.எச்.இ.எப்.சி., அமைப்பது குறித்தும் ஆலோசித்து வருகிறோம்' என்று தெரிவித்தார்.


Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை