erode district | கவுந்தப்பாடி மணிபுரம் கோவில் கும்பாபிஷேகம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கவுந்தப்பாடி மணிபுரம் கோவில் கும்பாபிஷேகம்

Added : ஜூன் 03, 2011

கவுந்தப்பாடி: கவுந்தப்பாடி மணிபுரம் வீரமாத்தி அம்மன் கோவில் மஹா கும்பாபிஷேகம் வரும் 6ம் தேதி நடக்கிறது. யாஹ பூஜை நாளை காலை 6 மணிக்கு கணபதி ஹோமத்துடன் துவங்குகிறது. தொடர்ந்து நவக்கிரஹ ஹோமம், தன பூஜை, கோ பூஜை, பெருந்தலையூர் வாணி ஆற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து வருதல், மாலை 5 மணிக்கு வாஸ்து சாந்தி பூஜை நடக்கிறது. வரும் 5ம் தேதி காலை 10 மணிக்கு கலச ஸ்தாபனம், கண் திறத்தல், மாலை 6 மணிக்கு விநாயகர் பூஜை, அங்குரார்ப்பணம், ரக்ஷா பந்தனம், கும்பஸ்தாபனம், முதற்கால பூஜை, இரவு 9 மணிக்கு அஷ்டபந்தனம் நடக்கிறது. வரும் 6ம் தேதி காலை 6 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை, மஹா பூர்ணாகுதி, காலை 9.15க்கு கும்பாபிஷேகம், மஹாபிஷேகம், அன்னதானம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை திருப்பணிக் கமிட்டியினர் செய்து வருகின்றனர்.


Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X