நா.ம.ச.ச.வெள்ளைச்சாமி நாடார் கல்லூரி கணிதவியல் முன்னாள் மாணவர்களின் குடும்ப சந்திப்பு விழா! | நா.ம.ச.ச.வெள்ளைச்சாமி நாடார் கல்லூரி கணிதவியல் முன்னாள் மாணவர்களின் குடும்ப சந்திப்பு விழா!| Dinamalar

நா.ம.ச.ச.வெள்ளைச்சாமி நாடார் கல்லூரி கணிதவியல் முன்னாள் மாணவர்களின் குடும்ப சந்திப்பு விழா!

Added : ஜூன் 12, 2011
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

* பதின்மூன்றாண்டிற்கு பிறகு கல்லூரியில் சந்தித்தனர்!
* முன்னாள் மாணவர்கள் அறக்கட்டளையும் துவக்கப்பட்டது!

மதுரை நா.ம.ச.ச.வெள்ளைச்சாமி நாடார் கல்லூரி கணிதவியல் பிரிவில் 1995– 1998 ஆம் ஆண்டில் படித்த முன்னாள் மாணவர்களின் பதின்மூன்றாண்டிற்கு பிறகு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த குடும்ப சந்திப்பு விழா கல்லூரி ஒலி – ஒளி அரங்கில் நடைபெற்றது. ஃபீனிக்ஸ் 2011 என பெயரிடப்பட்ட இவ்விழாவிற்கு கல்லூரி முதல்வர் ஜி.மாரீஸ்குமார் தலைமை தாங்கினார். முன்னாள் துறைத் தலைவர் எஸ்.கணகவேல் பாண்டியன் விழாவிற்கு முன்னிலை வகித்தார். முன்னாள் மாணவர் ராஜா வரவேற்றார். விழாவில் முன்னாள் மாணவர்களுக்கு பாடம் நடத்திய பேராசிரியர்கள் சி.சிவசாமி, ஆர்.துரைப்பாண்டியன், கே.குப்புசாமி, எம்.தனசேகரன், சி.விஜயன், ஏ.மில்டன் பிராங்ளின் பெனியேல், எம்.பெர்னாட், சுப.அழகர்நாதன், திருமதி.பி.மரியசெல்வம், ஏ.செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்து வழங்கினர்.
விழாவில் 1995 – 1998 ஆம் ஆண்டில் படித்த முன்னாள் மாணவர்கள் அனைவரும் தங்கள் குடும்பத்துடன் பங்கேற்றனர். முன்னாள் மாணவர்களில் சிலர் கணினி தொழில் நுட்பத்துறையில் வல்லுநர்களாகவும் சிலர் கல்லூரி விரிவுரையாளர்களாகவும் சிலர் பள்ளி ஆசிரியர்களாகவும் சிலர் தனியார் துறையில் மேலாளர்களாகவும் மேலும் சிலர் சுயதொழில் செய்பவர்களாகவும் இருந்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் தாங்கள் கல்லூரியில் பாடம் பயின்ற காலத்தில் தங்களுக்குள் நடைபெற்ற கேலி கிண்டல்கள், சுக துக்க அனுபவங்கள், ஒருவருக்கொருவர் செய்து கொண்ட உதவிகள், தேர்வு காலங்களில் நண்பர்களின் வீட்டு மொட்டைமாடியில் கழித்த இரவு நேர படிப்புகள் இ மரத்தடி அமர்வுகள் இ கிரிக்கெட் விளையாட்டின் போது ஏற்பட்ட சிறு சிறு சண்டைகள் மற்றும் பேருந்து பயணங்கள் ஆகியவற்றினை நினைவு கூர்ந்து மகிழ்ந்தனர்.
“மறவற்க மாசற்றார் கேண்மை” எனும் வள்ளுவரின் வாக்கிற்கிணங்க பதின்மூன்றான்டுகளுக்கு பிறகு கூடிய நண்பர்கள் தங்களுக்குள் அளாவளாவதுடன் நில்லாமல் முன்னாள் மாணவர்கள் அனைவரின் பங்களிப்புடன் கல்லூரியில் “1995 – 1998 ஆண்டு முன்னாள் கணிதவியல் மாணவர்கள் அறக்கட்டளை” என்ற பெயரில் ஒரு அறக்கட்டளையினை நிறுவி ஒவ்வொரு ஆண்டும் கல்வியில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு சிறப்பு பரிசு வழங்க வகை செய்தனர். கல்லூரி முதல்வர் ஜீ.மாரீஸ்குமார் பேசும்போது முன்னாள் மாணவர்கள் பெயரில் அறக்கட்டளை நிறுவி தற்போது தங்களது கல்லூரியில் கல்வி பயிலும் மாணவர்களை ஊக்கப்படுத்தி 1995 – 1998 கணித மாணவர்கள் அனைவரும் மற்றவர்களுக்கு ஒரு நல்ல முன்னுதாரணமாக திகழ்வதாக கூறினார்.
விழாவில் பங்கேற்ற கல்லூரி முதல்வர் மற்றும் முன்னாள் மற்றும் இந்நாள் பேராசிரியர்கள் அனைவருக்கும் முன்னாள் மாணவர்கள் சார்பில் நினைவுப்பரிசுகள் வழங்கப்பட்டது. நிறைவாக முன்னாள் மாணவர் ஆர்.சரவணபிரபு நன்றி கூறினார். விழா ஏற்பாடுகளை முன்னாள் மாணவர்கள் ஆர்.சரவணபிரபு, ஜே.சரவணக்குமார், ராஜா, ஏ.மதன், எஸ்.பாலாஜிகுமார் ஆகியோர் செய்திருந்தனர்.




Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X