100 terrorist organisations linked with Al-Quida banned | பயங்கரவாத அமைப்புகள் 100க்கு தடை அல்-குவைதாவுடன் தொடர்பு காரணம்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

பயங்கரவாத அமைப்புகள் 100க்கு தடை அல்-குவைதாவுடன் தொடர்பு காரணம்

Updated : மே 17, 2010 | Added : மே 17, 2010
பயங்கரவாதம்,அமைப்புகள்,தடை,அல்-குவைதா,terrorist,organisations,Al-Quida,banned

புதுடில்லி :உலக அளவில் செயல்படும் 100க்கும் மேற்பட்ட பயங்கரவாத அமைப்புகளை, தடை செய்யப்பட்ட அமைப்புகளாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த அமைப்புகள் எல்லாம் அல்-குவைதா அமைப்புடன் ஏதோ ஒரு வகையில் தொடர்புடையவை.லஷ்கர் -இ- தொய்பா, ஜெய்ஷ் -இ- முகமது, தெக்ரிக் -இ- பர்கான், அல்-பதர், ஜமாயத் -உல்- முஜாகிதீன், அல்-குவைதா, ஹர்கத் -உல்- முஜாகிதீன், ஹர்கத் -உல்- அன்சார், ஹர்கத் - உல் - ஜெகாத் -இ- இஸ்லாமி, ஹிஸ்புல் முஜாகிதீன், அல் -உமர்- முஜாகிதீன்,ஜம்மு காஷ்மீர் இஸ்லாமிய முன்னணி, உல்பா, என்.டி.எப்.பி.,  எல்.டி.டி.இ., சிமி, தீன்தர் அஞ்சுமன், இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் மக்கள் போர்ப்படை, மாவோயிஸ்ட் அமைப்பு, பப்பர் கல்சா இன்டர்நேஷனல், காலிஸ்தான் கமாண்டோ படை, சர்வதேச சீக்கிய இளைஞர் சம்மேளனம் போன்றவை உட்பட 33 அமைப்புகளை, பயங்கரவாத அமைப்புகளாக மத்திய அரசு ஏற்கனவே அறிவித்து அவற்றை தடை செய்துள்ளது.இந்நிலையில், சர்வதேச பயங்கரவாத அமைப்பான அல்-குவைதாவுடன் இணைந்து உலக அளவில் செயல்படும் 100க்கும் மேற்பட்ட அமைப்புகளையும் தடை செய்யப் பட்ட அமைப்புகளாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இவற்றின் பட்டியலையும், ஏற்கனவே உள்ள 33 பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலுடன் சேர்த்துள்ளது.இந்தோனேசியாவின் பாலி தீவில் நிகழ்ந்த குண்டு வெடிப்புக்கு காரணமான ஜெமா இஸ்லாமியா, லிபியாவில் செயல்படும் இஸ்லாமிக் ஜிகாத் குரூப், மொராக்கோவைச் சேர்ந்த இஸ்லாமிக் போர்ப்படை, எகிப்தில் செயல்படும் இஸ்லாமிக் ஜிகாத், பிலிப்பைன்சின் சர்வதேச இஸ்லாமிய நிவாரண அமைப்பு, உஸ்பெகிஸ்தானின் இஸ்லாமிக் இயக்கம் போன்றவை இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ள புதிய அமைப்புகள். இந்த அமைப்புகளை ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில், ஏற்கனவே தடை செய்யப்பட்ட அமைப்புகளாக அறிவித்துள்ளது.சட்ட விரோத நடவடிக்கைகள் தடை சட்டத்தின் கீழ், இந்த அமைப்புகள் தடை செய்யப்பட்ட அமைப்புகளாக அறிவிக்கப் பட்டுள்ளன. இந்த அமைப்புகளுடன் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் போது, எந்தவிதமான சட்ட ரீதியான இடர்ப்பாடுகளும் பாதுகாப்பு நிறுவனங்களுக்கு உருவாகாமல் தடுக்கவே இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.தடை செய்யப்பட்ட அமைப்புகளின் புதிய பட்டியல், உள்துறை அமைச்சகத்தின் வெப்சைட்டில் விரைவில் வெளியிடப்படும். புதிய பட்டியலில், காலிஸ்தான் ஜிந்தாபாத் படை என்ற பயங்கரவாத அமைப் பின் பெயரும் இடம் பெற உள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்தியாவில் இந்த அமைப்பின் சட்ட விரோத நடவடிக்கைகள் அறிவித்துள்ளதால், தடை அமைப்புகளின் பட்டியலில் சேர்க்கப்பட் டுள்ளது.



Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X