Guindy Engineering College Alumni Meet | கிண்டி பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு| Dinamalar

கிண்டி பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

Added : ஜூலை 04, 2011
Advertisement

சென்னை: கிண்டி பொறியியல் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி, சென்னை அண் ணா பல்கலை வளாகத்தில் நடந்தது. இதில், அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற வெளிநாடுகளில் பணிபுரியும் முன்னாள் மாணவர்களை ஒருங்கிணைக்கும் வகையில் நடந்த நிகழ்ச்சியில், 650க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டனர். அண்ணா பல்கலை துணைவேந்தர் மன்னர் ஜவகர், நிகழ்ச்சியை துவக்கி வைத்து பேசியதாவது: உலகத்தில் உள்ள முன்னாள் மாணவர்களை ஒன்றிணைக்கும் முதல் நிகழ்ச்சி இது. உலகத்தில் எந்த நிகழ்ச்சிக்கு சென்றாலும், அதில் ஒருவர் கிண்டி இன்ஜினியரிங் கல்லூரி முன்னாள் மாணவர் என்று தன்னை அறிமுகப்படுத்துவார். அந்தளவிற்கு, இங்கு படித்த மாணவர்கள் உலகம் முழுவதும் பரவியிருக்கின்றனர். பயங்கர காற்று வீசினாலும், புளியமரம் காற்றில் சாய்வது அரிது. காரணம், அதன் வேர்கள் அந்தளவிற்கு வலிமையானவை. அதுபோல், அண்ணா பல்கலை வளர்ச்சிக்கு வலிமையான ஆணி வேராக முன்னாள் மாணவர்கள் இருந்து வருகின்றனர். இவ்வாறு மன்னர் ஜவகர் கூறினார்.
நிகழ்ச்சியில், கிண்டி இன்ஜினியரிங் கல்லூரி வரலாறு குறித்த அரிய புகைப்படங்கள் மற்றும் தகவல் அடங்கிய, சி.டி.,யை, அண்ணா பல்கலை துணைவேந்தர் மன்னர் ஜவகர் வெளியிட, ஓய்வு பெற்ற ஐ.எப்.எஸ்., அதிகாரியும், முன்னாள் மாணவருமான பார்த்தசாரதி பெற்றுக் கொண்டார். கிண்டி பொறியியல் கல்லூரி மாணவர்கள் சங்க தலைவர் நடராஜன், செயலர் சக்தி நாதன், அண்ணா பல்கலை டீன் சேகர் உள்ளிட்ட பலர் பங்கேற்று, தங்கள் பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாத முன்னாள் மாணவர்கள், "வீடியோ கான்பரன்சிங்' மூலம் கலந்துரையாடி தங்கள் பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.




Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X