dinamalar cuddalore district news | மூலிகை பண்ணை: மாணவர்கள் பார்வை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மூலிகை பண்ணை: மாணவர்கள் பார்வை

Added : ஜூலை 19, 2011
Advertisement

நெல்லிக்குப்பம் : திருக்கண்டேஸ்வரம் மூலிகை பண்ணையை பள்ளி மாணவர்கள் களப்பயணமாக சென்று பார்வையிட்டனர். நெல்லிக்குப்பம் திருக்கண்டேஸ்வரத்தில் கடந்த 1974ம் ஆண்டு முதல் சமரச சுத்த சன்மார்க்க யோகசாலையை சிவராமன் நடத்தி வருகிறார். இங்கு குருகுல கல்வி, உணவுசாலை, மருத்துவ சாலை, தவக்குடில், யோகசாலை, மூலிகை தோட்டம் உள்ளது. மேலும் யோகா, மூச்சுப்பயிற்சி, தியானம் வகுப்புகள் நடக்கிறது. திருக்கண்டேஸ்வரம் நகராட்சி உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் 200 பேர் நேற்று களப்பயணம் மேற்கொண்டு யோக சாலையை பார்வையிட்டனர். கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் குணசேகரன், தலைமையாசிரியர் செல்வி, ஆசிரியை பத்மா இளவரசி பங்கேற்றனர். மாணவர்களை நேரடியாக மூலிகை தோட்டத்துக்கு அழைத்துச் சென்று மூலிகைகளின் பயன்கள் மற்றும் மூச்சுப்பயிற்சி, தியானம், யோகா, செயல் விளக்கம் மூலம் அதன் பயன்களை சாது சிவராமன் விளக்கினார்.


Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X