CUDDALORE NEWS | தொழிலாளர் நல வாரியத்தில் உறுப்பினர் சேர்க்கைக்கு அழைப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தொழிலாளர் நல வாரியத்தில் உறுப்பினர் சேர்க்கைக்கு அழைப்பு

Added : செப் 04, 2011
Advertisement

கடலூர்:அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியத்தில் உறுப்பினர்களாக சேர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.இதுகுறித்த தொழிலாளர் அலுவலர் (சமூக பாதுகாப்பு திட்டம்) வெங்கடேசன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு;தொழிலாளர் சமூக பாதுகாப்பு திட்ட அலுவலகம் கடலூர் சீத்தாராம் நகர் முதல் குறுக்குத் தெரிவில் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்தில் கட்டுமானம், ஆட்டோ, நடைபாதை வியாபாரிகள், தையல், சலவை, முடிதிருத்துவோர், சுமை தூக்குவோர், ஓவியர், போட்டோ கிராபர், நகை வேலை செய்பவர், வீட்டு பணியாளர், காலணி தைப்பவர், நெசவாளர், மண்பாண்டம் செய்பவர், கைவினைத் தொழிலாளர்கள் உரிய படிவத்தை பூர்த்தி செய்து உறுப்பினராக பதிவு செய்து கொள்ளலாம்.இதன் மூலம் கல்வி, திருமணம், மகப்பேறு, இயற்கை மரணம், விபத்து மரணம் மற்றும் ஓய்வூதிய பலன்களை பெற முடியும்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X