Uratchi president complaints to inquiry officer, that helicopter base set up in kodanadu | கோடநாடு எஸ்டேட்டில் ஹெலிகாப்டர் தளம் : ஊராட்சித் தலைவர் புகார்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கோடநாடு எஸ்டேட்டில் ஹெலிகாப்டர் தளம் : ஊராட்சித் தலைவர் புகார்

Updated : ஜூலை 06, 2010 | Added : ஜூலை 04, 2010 | கருத்துகள் (25)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
Uratchi president, complaint,inquiry,officer, helicopter,  base,kodanadu,கோடநாடு எஸ்டேட், ஹெலிகாப்டர் தளம்,  ஊராட்சித் தலைவர், புகார்

ஊட்டி :கோடநாடு எஸ்டேட் விவகாரம் பூதாகரமாகி வெடித்து வருகிறது. எஸ்டேட்டில் அனுமதியின்றி ஹெலிகாப்டர் தளம் அமைக்கப்பட்டுள்ளதாக விசாரணை அதிகாரியிடம் ஊராட்சி தலைவர் புகார் அளித்துள்ளார்.


கோடநாடு எஸ்டேட்டில் நான்கு கட்டடங்கள் கட்ட அனுமதி கோரி எஸ்டேட் நிர்வாகம் சார்பில் ஊராட்சியில் விண்ணப்பிக்கப்பட்டது. இந்த அனுமதியை வைத்துக் கொண்டு விதிமுறை மீறி 5 ஆயிரம் சதுர அடியில் தேயிலை தொழிற்சாலை கட்டப்பட்டு வருகிறது. இந்த விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. விதிமுறை மீறி தொழிற்சாலை கட்டப்பட்டு வருவதாக அறிந்த ஊராட்சி தலைவர் பொன்தோஸ் மேல் நடவடிக்கைக்காக அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார். ஆனால் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. தொழிற்சாலை கட்டுமானப் பணிகள் நடந்து வரும் நிலையில் இது குறித்து அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காதது அரசை அதிருப்திக்கு உள்ளாக்கியுள்ளது.கோடநாடு எஸ்டேட்டில் அனுமதியின்றி தேயிலை தொழிற்சாலை கட்டப்பட்டுள்ளதாக புகார் எழுந்ததை அடுத்து அரசு சார்பில் தனி நபர் விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.


விசாரணை அதிகாரி உதயசந்திரன் கோடநாடு விவகாரம் தொடர்பாக கடந்த மூன்று தினங்களாக ஊட்டியில் தங்கி விசாரணை மேற்கொண்டு வருகிறார். இவர் எந்நேரமும் கோடநாடு எஸ்டேட்டுக்கு சென்று விசாரணை மேற்கொள்வார் என்பதால் கோடநாடு பகுதி எந்நேரமும் பரபரப்பாக உள்ளது.விசாரணை அதிகாரியை நேற்று சந்தித்த தலைவர் பொன்தோஸ், கோடநாடு எஸ்டேட்டில் அனுமதியின்றி ஹெலிகாப்டர் தளம் அமைக்கப்பட்டு வருவதாக புகார் அளித்தார்.ஜெ., கோடநாடு எஸ்டேட்டை வாங்கியதிலிருந்து அந்த எஸ்டேட் தொடர் சர்ச்சைகளில் சிக்கி வருகிறது. முதலில் விதிமுறை மீறி பங்களா கட்டப்பட்டதாக புகார் எழுந்தது. பின்னர் எஸ்டேட்டை ஒட்டியுள்ள அண்ணா நகர், காமராஜர் நகர் பகுதிகளுக்கு செல்லும் வழியை எஸ்டேட் நிர்வாகம் அடைத்தது, அண்ணா நகரில் உள்ள பட்ட துளசியம்மன், விநாயகர் மற்றும் மதுரை வீரன் கோவில்களுக்கு நடுவே வேலி அமைத்தது என தொடர் சர்ச்சைகளில் சிக்கிய எஸ்டேட்டில் தற்போது அனுமதியின்றி தேயிலை தொழிற்சாலை மற்றும் ஹெலிகாப்டர் தளம் அமைக்கப்பட்டு வருவதாக புகார் எழுந்திருக்கிறது.


இந்நிலையில், ஊராட்சி தலைவர் பொன்தோசை வரவழைத்து முதல்வர் விசாரித்துள்ளார். பொன்தோஸ் அனுமதி மீறி தொழிற்சாலை கட்டப்பட்டு வருவதாக அதிகாரிகளிடம் தெரிவித்து விட்டதாக  கூறியிருக்கிறார். அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் விட்டு விட்டதாகவும்  பொன்தோஸ் முதல்வரிடம் தெளிவுபடுத்தியதாகத் தெரிகிறது.


கவுன்சிலர்கள் யார் பக்கம்?கோடநாடு ஊராட்சியில் 10 கவுன்சிலர்கள் உள்ளனர். தி.மு.க.,க்கு 7ம், அ.தி.மு.க.,க்கு 3 கவுன்சிலர்களும் உள்ளனர். ஆளுங்கட்சியை சேர்ந்த பொன்தோஸ் தலைவராக உள்ளார். இவர் முன்னாள் அரசு கொறடா முபாரக் ஆதரவாளர் என கூறப்படுகிறது. ஆகவே, அமைச்சர் ராமச்சந்திரனுக்கும், கொடநாடு ஊராட்சி தலைவர் பொன்தோசும் எப்போதும் எதிரணியில் உள்ளதாக உள்ளூர் ஆளும் கட்சியினர் வெளிப்படையாக பேசி வருகின்றனர்.


Advertisement




வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
tamilan - sharjah,ஐக்கிய அரபு நாடுகள்
09-ஜூலை-201021:34:17 IST Report Abuse
tamilan தமிழ் தமிழ் தமிழ்னு சொல்லும் கலைஞர் இலங்கை தமிழர்களை சோனியாவின் நீண்ட நாள் கனவை நிறைவேற்ற அவருடன் கைகோர்து கொன்று குவித்தார். இன்னும் தன்னுடைய குடும்பத்திற்கு என்ன பிளான் பண்ண போகிறார் என்று தெரிய வில்லை
Rate this:
Share this comment
Cancel
சாமீ - Karur,இந்தியா
05-ஜூலை-201022:39:01 IST Report Abuse
சாமீ நம்ம கலைஞர் ஐயா வோட மகன்கள், மகள்கள், மருமகங்களுடைய கார்கள் எல்லாம் இரண்டு கோடி க்கு கிழேயும் .. பத்து லச்சத்திற்கு மேலயும் ....( ஹம்மர் .... சுமாராக ஒரு கோடி .)... இன்னும் பல லக்ஸூரி கார்கள் ...... அவர்களிடம் உள்ளன .... இவைகள் எல்லாம் அவர்களுடைய பேரன் மார்கள்........ வியர்வை சிந்தி உழைத்தது என்று ... நான் ஆணித் தரமாக இதில் எடுத்து வைக்கிறேன்.... இதை மறுப்பவர்கள் ... என்னிடம் வாதிடுங்கள்....
Rate this:
Share this comment
Cancel
கே.ராஜசேகரன் - chennai,இந்தியா
05-ஜூலை-201022:14:40 IST Report Abuse
கே.ராஜசேகரன் மக்களின் கவனத்தை திசை திருப்ப பத்திரிகைகள் செய்யும் மோடி மஸ்தான் வேலைதான் இந்த செய்தி.ஒருலட்சம் கோடி spectrum ஊழலை,முடிந்து போன கதை என்று சொன்ன கருணாநிதியை மகாத்மா போல சித்தரிப்பது கொடுமை. அரசு ஊழியர்களும் பத்திரிகைகளும் தங்கள் நிலைபாட்டை மாற்றிக்கொள்ளாத வரையில் தமிழக மக்களுக்கு விமோசனமே கிடையாது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை