Dhoni weds Sakshi in presence of teammates, close friends | இந்திய கேப்டன் தோனிக்கு திருமணம்!| Dinamalar

பொது செய்தி

இந்தியா

இந்திய கேப்டன் தோனிக்கு திருமணம்!

Updated : ஜூலை 06, 2010 | Added : ஜூலை 04, 2010 | கருத்துகள் (72)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
Dhoni, wed, Sakshi,  teammates, close friends,இந்திய, கேப்டன், தோனி,திருமணம்

டேஹ்ராடூன் : இந்திய கேப்டன் தோனி, தனது வாழ்க்கையில் புதிய இன்னிங்சை துவக்குகிறார். நேற்று இவரது திருமணம் கோலாகலமாக நடந்தது.


இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனி(28). இவரது பள்ளி தோழி சாக்ஷி சிங் ராவத்(23). மிக நீண்ட கால நண்பர்களான இவர்கள், ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் உள்ள டி.ஏ.வி., பள்ளியில் ஒன்றாக படித்தவர்கள். இரு குடும்பத்தினர் இடையே நல்ல பழக்கம் உள்ளது. இருவரது தந்தையும் ஒரே நிறுவனத்தில் பணி புரிந்தனர். தற்போது சாக்ஷி சிங், "ஓட்டல் மேனேஜ்மென்ட்' படித்து வருகிறார். இவர்களது


திருமண நிச்சயதார்த்தம் நேற்று முன் தினம் டேஹ் ராடூனில் உள்ள நட்சத்திர ஓட்டலில் எளிமையாக நடந்தது. இவர்களது திருமணம் வரும் அக்டோபரில் நடக்கலாம் என கூறப்பட்டது. ஆனால், நேற்று திடுதிப் பென்று உத்தரகாண்ட் தலைநகர் டேஹ்ராடூனில் உள்ள பண்ணை வீட்டில் தோனி-சாக்ஷி சிங் ராவத் திருமணம் நடந்தது. இந்த வீடு ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியாவுக்கு சொந்தமானது என கூறப்படுகிறது. இதில் ஹர்பஜன் சிங், நெஹ்ரா உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்கள் மற்றும் நடிகர் ஜான் ஆபிரகாம் உள்ளிட்ட மிகவும் நெருக்கமானவர்கள் மட்டும் பங்கேற்றனர். பி.சி.சி.ஐ., தலைவர் சஷான்க் மனோகரும் கலந்து கொண்டார்.


வெற்றி கேப்டன்: கடந்த 2004ல் இந்திய அணியில் அறிமுகமான தோனி, மிக விரைவாக முன்னேற்றம் கண்டார். இதுவரை 43 டெஸ்ட், 166 ஒரு நாள் போட்டி, 25 "டுவென்டி-20' போட்டிகளில் பங்கேற்றுள்ளார். விக்கெட் கீப்பர், பேட்ஸ் மேன், கேப்டன் என மூன்று பணிகளிலும் பட்டையை கிளப்பும் இவர், 2007ல் இந்திய அணிக்கு "டுவென்டி-20' உலக கோப்பை பெற்றுத் தந்தார். ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்க மண்ணிலும் வெற்றிவாகை சூடினார். சமீபத்தில் ஆசிய கோப்பை கைப்பற்றி சாதித்தார். இப்படி வெற்றி கேப்டனாக அசத்தும் இவர், திருமண வாழ்க்கையை இனிதே துவக்குகிறார்.


இது குறித்து அவரது குடும்ப நண்பர் ஒருவர் கூறுகையில்,""தற்போது கிரிக்கெட் போட்டிகள் எதுவும் இல்லை. இலங்கை தொடர் ஜூலை 18ல் தான் துவங்குகிறது. எனவே, தான் திருமணத்தை முடிக்க இந்த தருணத்தை தேர்வு செய்தோம். தனது திருமண வாழ்க்கையை கொண்டாட தோனிக்கு போதிய "பிரேக்' கிடைத்து உள்ளது,''என்றார்.


பலத்த பாதுகாப்பு: நேற்று திருமணம் நடந்த பண்ணை வீட்டில் இருந்து சுமார் 1.5 கி.மீ., தூரத்திற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. தனியார் பாதுகாப்பு படையினரும் கண் காணிப்பு பணியில் ஈடுபட்டனர். "மீடியா'வுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.


இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில்,""தங்களது சொந்த நிகழ்ச்சி என்று தோனி குடும்பத்தினர் தெரிவித்தனர். இதனால் தான் பாதுகாப்பு கெடுபிடிகள் அதிகமாக உள்ளது,''என்றார்.


ரசிகர்கள் உற்சாகம்:தோனியின் திருமண செய்தியை கேட்டு அவரது ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். ராஞ்சியில் உள்ள இவரது வீட்டு முன் திரண்ட இவர்கள், பட்டாசு வெடித்து கொண்டாடினர்.


மும்பையில் வரவேற்பு:தோனியின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி வரும் 7ம் தேதி மும்பையில் நடக்க உள்ளது. அன்றைய தினம் தோனியின் 29வது பிறந்த நாள் என்பதால், மும்பை களை கட்ட காத்திருக்கிறது.


சச்சின் "ஆப்சென்ட்':தோனியின் திருமண நிகழ்ச்சியில் முன்னணி வீரர்களான சச்சின், சேவக், காம்பிர் ஆகியோர் பங்கேற்க இயலவில்லை. விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகளை காண லண்டன் சென்றுள்ளார் சச்சின். இதே போல மற்றவர்களும் ஏற்கனவே ஒத்துக் கொண்ட நிகழ்ச்சியில் பங்கேற்க சென்று விட்டதால், தோனிக்கு நேரடியாக வாழ்த்து சொல்ல இயலவில்லை.


ஷில்பா, பிபாஷா வாழ்த்து:தோனிக்கு  திருமண வாழ்த்து குவிகிறது. பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி தனது "டுவிட்டர்' இணையதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், ""தோனி-சாக்ஷிக்கு எனது வாழ்த்துக்கள். திருமண வாழ்க்கையில் அனைத்து சந்தோஷங்களும் கிடைக்கட்டும்,'' என குறிப்பிட்டுள்ளார். இதே போல நடிகை பிபாஷா பாசு, பிரபல பாடகி ஆஷா போன்ஸ்லே உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.


கபில், யுவராஜ் வாழ்த்து:இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் கபில் தேவ் மற்றும் யுவராஜ் ஆகியோர் தோனிக்கு வாழ்த்து தெரிவித்து உள்ளனர். கபில் கூறுகையில்,""தோனியின் திருமண செய்தி மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. கிரிக்கெட் வாழ்க்கையைவிட அவரது திருமண வாழ்க்கை இன்னும் சிறப்பாக அமையட்டும்,'' என்றார்.


Advertisement
வாசகர் கருத்து (72)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
refnan - tenkasi,இந்தியா
05-ஜூலை-201022:16:02 IST Report Abuse
refnan ஆல் பெஸ்ட் டோனி by ரெபணன் தாஸ் இஸ் லேன்ட்
Rate this:
Share this comment
Cancel
karem - ramnad,இந்தியா
05-ஜூலை-201022:15:11 IST Report Abuse
karem ஆணியை புடுங்க வேணாம்
Rate this:
Share this comment
Cancel
govind - chennai,ஜார்ஜியா
05-ஜூலை-201022:02:51 IST Report Abuse
govind all the best dhoni
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை