Coimbatore District News | சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு துண்டு பிரசுரம் வினியோகம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு துண்டு பிரசுரம் வினியோகம்

Added : நவ 13, 2011
Advertisement

கோவை : கரூர் நவயுகம் அறக்கட்டளை மற்றும் ஞானோதயம் கல்வி அறக்கட்டளை சார்பில், உடல்பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வுக்காக, பொதுமக்கள் மத்தியில் துண்டு பிரசுரம் வினியோகம் செய்யப்பட்டது.
ஆர்.எஸ்.புரம்., பகுதியில் நேற்று காலை நடந்த நிகழ்ச்சியில், நவயுகம் அறக்கட்டளை தலைவர் ராஜா தலைமை வகித்தார். ஞானோதயம் கல்வி அறக்கட்டளை தலைவர் தனேஷ், செயலாளர் மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உடல் பாதுகாப்பதற்கான முக்கிய குறிப்புகள், சுற்றுச்‹ழல் பாதுகாப்பு, உணவு உட்கொள்ளும் முறை, மொபைல்போன் பயன்படுத்தும் முறை மற்றும் பொதுகுறிப்புகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை நவயுகம் அறக்கட்டளை மற்றும் ஞானோதயம் கல்வி அறக்கட்டளை உறுப்பினர்கள் பொதுமக்களுக்கு வழங்கினர்.



Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X