லாரிகளுக்கான தேசிய அனுமதி சீட்டு கடலூரில் கலெக்டர் துவக்கி வைத்தார்

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

கடலூர்: முதல் முறையாக லாரிகளுக்கான தேசிய அனுமதிச் சீட்டை உரிமையாளர்களுக்கு கலெக்டர் சீத்தாராமன் வழங்கி திட்டத்தை துவக்கி வைத்தார்.


ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்திற்கு லாரிகள் செல்ல வேண்டுமானால் 5,000 ரூபாய் சாலை வரி செலுத்தி அனுமதி பெறவேண்டும். தற்போது தமிழ்நாட்டில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட அகில இந்திய தேசிய அனுமதிச் சீட்டு ஆண்டிற்கு 15 ஆயிரம் செலுத்தினால் இந்தியாவின் எந்த பகுதிக்கும் செல்லலாம். கடலூரில் முதல் முறையாக இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் கலெக்டர் சீத்தாராமன் தலைமை தாங்கி லாரி உரிமையாளர்களுக்கு அனுமதிச் சீட்டை வழங்கி துவக்கி வைத்தார்.


பின்னர் அவர் கூறியதாவது: கடந்த 3ம் தேதி முதல் புதுச்சேரி மாநில பதிவு வாகனங்கள் பிடிக்கப் பட்டு சாலை வரி வசூலிக்கப்படுகிறது. அதன்படி கடலூர் மாவட்டத் தில் கடலூர், சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி வட்டாரங்களில் வட்டார போக்குவரத்து துறையினர், போலீசார் வாகன தணிக்கை மேற்கொண்டனர். அதில் நேற்று 19ம் தேதி வரை 1,925 இருசக்கர புதுச்சேரி பதிவு வாகனங்கள் பிடிக்கப்பட்டு 54 லட்சத்து 97 ஆயிரத்து 654 ரூபாயும், 47 கார்களுக்கு 12 லட்சத்து 63 ஆயிரத்து 217 ரூபாய் வசூல் செய்யப்பட்டது. மொத்தம் 1,972 வாகனங்கள் மூலம் 67 லட்சத்து 60 ஆயிரத்து 871 ரூபாய் வசூலிக்கப்பட்டது. இவ்வாறு கலெக்டர் கூறினார்.


நிகழ்ச்சியில் வட்டார போக்குவரத்து அலுவலர் ஜெயக்குமார் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். இத்திட்டம் அரசின் புதிய சட்டப் படி அனைத்து மாநிலங்களுக்கும் செல்ல இந்த அனுமதி செல்லும். இனி எந்த மாநிலத்திற்கும் தனித்தனியாக 5,000 செலுத்த தேவையில்லை. முன்பு பழைய முறையில் அனுமதி பெற்றவர்கள் புதிய திட்டத்தின்படி அகில இந்திய தேசிய அனுமதி மேல்குறிப்பு பெற்றுக் கொள் ளலாம்.


Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்