முயல், வேலி மசால் பயிர் சாகுபடிக்கு அரசு மானியம் | முயல், வேலி மசால் பயிர் சாகுபடிக்கு அரசு மானியம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

முயல், வேலி மசால் பயிர் சாகுபடிக்கு அரசு மானியம்

Added : நவ 26, 2011
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ராமநாதபுரம்:பால்வளத்தை மேம்படுத்த கால்நடைகளுக்குரிய பசுந்தீவனம் சாகுபடிக்கு அரசு மானியத்துடன் கூடிய தீவனப்பயிர் அபிவிருத்தி திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. கால்நடைகளின் பராமரிப்பு செலவை குறைப்பதில் பசுந்தீவனம் முக்கிய பங்காற்றுகிறது. புரதச்சத்து நிறைந்த வேலி மசால், முயல்மசால் போன்ற பயிரை இறவையிலும், மானாவாரியிலும் பயிர் செய்து, கறவை மாடுகளுக்கு வழங்க விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


இதற்காக கம்பு நேப்பியர் ஒட்டுப்புல் ரகம் கோ-3, கோ-4 உடன் முயல் மசால், வேலி மசால் தீவனப்பயிர்கள் இறவையில் சாகுபடி செய்ய கால் ஏக்கருக்கு 2590 ரூபாய் மானியம் வழங்கப்பட உள்ளது. மானாவாரியில் கால் ஏக்கரில் தீவனசோளம், தீவன மக்காசோளம் உடன் தீவனதட்டைப்பயிறு சாகுபடி செய்ய 1350 ரூபாய் மானியம், தெளிப்பு நீர் பாசன கருவிகள் நிறுவுவதற்கு குறு மற்றும் சிறு, குறு விவசாயிகளுக்கு 25 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கப்பட உள்ள. இதர விவசாயிகளுக்கு 18 ஆயிரத்து 750 மானியம், கை மற்றும் மின்சக்தியால் இயங்கும் புல் நறுக்கும் கருவியின் மதிப்பில் 75 சதவீதம் மானியம், ஊறுகாய் புல் தயார் செய்ய 30 ஆயிரம் மானியம் வழங்கும் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X