அவ்வையார், சேரமான் கணைக்கால் இரும்பொறை, பாலை பாடிய பெருங்கடுங்கோ போன்ற பழம் பெரும் புலவர்கள் வாழ்ந்த கொங்கு நாட்டில் கவிஞர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும் எப்போதும் பஞ்சமில்லை. நாம் வாழும் காலத்தில் தமிழ் மொழிக்கும், கோவை மண்ணுக்கும் தன் இலக்கிய படைப்புக்களால் பெருமை சேர்த்த மூத்த எழுத்தாளர்கள், கவிஞர்கள் இவர்கள்...
கவிஞர் சிற்பி: தமிழ் படைப்பிலக்கியச் சூழலில் மிக முக்கியமான கவியாளுமை, கவிஞர் சிற்பி. கவிதையை, சமூகத்தின் குரலாக மாற்றிய வானம்பாடிக் கவிஞர்களில் ஒருவர். அறுபதுக்கும் மேற்பட்ட சுய படைப்புகளோடு பிற மொழி இலக்கியங்களை மொழி பெயர்த்தும் தமிழுக்கு வளம் சேர்த்தவர். சுய படைப்பு மற்றும் மொழிபெயர்ப்புக்காக இரண்டு முறை "சாகித்ய அகாடமி' விருதுகளை பெற்றவர். தமிழக அரசின் பாவேந்தர் விருது உட்பட பல விருதுகளை பெற்றிருக்கும் கல்வியாளர். 75 வயதை கடந்தும் தொடர்ந்து எழுதிவரும் இவர், தற்போது பொள்ளாச்சியில் வசிக்கிறார்.
கவிஞர் புவியரசு: வானம்பாடியின் தாய் பறவை என்று அழைக்கப்படும் தனித்துவம் மிக்க கவிஞர். தமிழில் பல கவிதை, கட்டுரை நூல்களை எழுதியிருக்கும் இவர், ஏராமான நூல்களை தமிழுக்கு மொழி பெயர்த்துள்ளார். கையொப்பம் என்ற இவரது கவிதை நூலுக் காகவும், சிறந்த மொழி பெயர்ப்புக்காகவும் இரு முறை "சாகித்ய அகாடமி' விருதை பெற்று உள்ளார். கமலுடன் இணைந்து திரைத்துறையில் பணியாற்றி வரும் இவர், தற்போது கவுண்டம்பாளையத்தில் வசிக்கிறார்.
நாஞ்சில் நாடன்: நவீன தமிழ் படைப்பிலக்கியச் சூழலில் மிக முக்கியமான எழுத்தாளர் நாஞ்சில் நாடன். பிறந்து வளர்ந்தது நாஞ்சில் நாடு என்றாலும், கொங்கு நாட்டை நாடி வந்து, கோவை மண்ணில் 30 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்பவர். நாவல், சிறுகதை, கட்டுரை, கவிதை என 40க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கிறார். இவரின் "சூடிய பூ சூடற்க' என்ற நூலுக்காக இவருக்கு, கடந்த ஆண்டுக்கான " சாகித்ய அகாடமி' விருது வழங்கப்பட்டது. இவரது "தலைகீழ் விகிதங்கள்' என்னும் நாவல்தான், "சொல்ல மறந்த கதை' என்னும் திரைப்படமாக உருவெடுத்தது. கோவை ஜி.வி.ரெசிடென்சியில் வசிக்கிறார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.