23. இம்மண்ணின் எழுத்தாளர்கள்
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

கோவை ஞானி: ஐம்பது ஆண்டுகளாக நவீன படைப்பிலக்கிய விமர்சன தளத்தில் இயங்கி வரும் மூத்த தமிழறிஞர் . கி.பழனிசாமி என்ற இயற்பெயரை கொண்ட இவர், கோவைக்கு அருகில் உள்ள சோமனூரில் 1935 ல் பிறந்தவர் . கவிதை, விமர்சனம், திறனாய்வு கட்டுரைகள் என, 20 க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கிறார். கோவையில் "நிகழ்' என்ற இலக்கிய இதழை நடத்தியவர். நவீன, பின்நவீன இலக்கிய படைப்புக்கள் சார்ந்து இவர் எழுதும் விமர்சனங்கள், திறனாய்வுகள் ஆக்கபூர்வமானதாக படைப்பாளர்கள் மத்தியில் கருதப்படுகிறது. இந்தியாவில் கட்சி அரசியல் நடத்தும் கம்யூனிச இயக்கங்களை கருத்தியல் அடிப்படையில் தொடந்து விமர்சித்து வருபவர். இப்போது, "தமிழ் நேயம்' என்ற இலக்கிய மாத இதழை நடத்தி வருகிறார். எழுத்தாளர் ஜெயமோகன், "தன் இலக்கிய ஆசான்' என்று குறிப்பிடுவது இவரைத்தான்.
சூரியகாந்தன்: எளிய மனிதர்களின் உணர்வுகளையும், நவீன பொருளாதார மாற்றங்களால் சிதைந்த விவசாய பெருங்குடி மக்களின் வாழ்க்கையையும் யதார்த்தமான கதை ஓவியங்களாக பதிவு செய்திருப்பவர். இவரின் "மானாவாரி மனிதர்கள்' நாவலை நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் "ஃபேர்லியஸ் பர்க்'ன் நாவலோடு திறனாய்வாளர்கள் ஒப்பிடுகிறார்கள். இலக்கிய சிந்தனை விருது உட்பட 10 க்கும் மேற்பட்ட விருதுகளை பெற்று இருக்கும் இவர், கோவை அரசு கலைக் கல்லூரியில் தமிழ்த்துறை பேராசிரியராக பணிபுரிகிறார். கதை, கவிதை, கட்டுரை, நாவல்கள் என 30கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கும் இவரின் படைப்புகள், ஆங்கிலம், மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. எழுபதுக்கும் மேற்பட்டவர்கள் இவரது நூல்களை ஆய்வு செய்து எம்.பில்., மற்றும் பி.எச்.டி பட்டம் பெற்றுள்ளனர். இவரது நூல்கள் பல கல்லூரிகளில் பாடங்களாகவும் உள்ளன.
சி.ஆர். ரவீந்திரன்: கோவை மக்களின் மனம் கவர்ந்த மண் வாசனை எழுத்தாளர் சி.ஆர். ரவீந்திரன். இதுவரை 13 நாவல்கள், 20 மொழி பெயர்ப்புகள், 100 க்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதி இருக்கும் இவர், தனது "ஈரம் கசிந்த நிலம்' என்ற நாவலுக்காக தேசிய அளவிலான "பாரதீய பாசா பரிசத்' விருது, கஸ்தூரி சீனிவாசா அறக்கட்டளை விருது என, பல விருதுகளை பெற்றவர். மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் இவரது படைப்புக்கள் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. இப்போதும் எழுதி வரும் இவர், கோவை பேரூர் செட்டிபாளையத்தில் வசிக்கிறார்.
மா. நடராஜன்: கொங்கு நாட்டின் விவசாயிகள் மற்றும் விவசாயக் கூலிகளின் வாழ்க்கையையும், உணர்வுகளையும் பிரதிபலிக்கும் படைப்புக்களை எழுதி வரும் இவர், கிணத்துக்கடவுக்கு அருகில் உள்ள மாதே கவுண்டம்பாளையத்தில் பிறந்தவர். "ஒண்டிகாரன் பண்ணயம்', "ஊர் கலைஞ்சு போச்சு' ஆகிய நாவல்கள் மற்றும் "கந்தாயம்' சிறுகதை தொகுப்பு போன்றவை இவரது குறிப்பிடதக்க படைப்புகளாகும். பல கல்லூரிகளில் இவரது நூல்கள் பாடமாக வைக்கப்பட்டுள்ளன. கோவை சி.பி.எம்., கல்லூரியில் தமிழ்த்துறை பேராசிரியராக இருந்து ஓய்வு பெற்ற இவர், தற்போது கோவைபுதூரில் வசிக்கிறார்.
கவிஞர் சக்திகனல்: வானம்பாடி கவிஞர்களில் முக்கியமானவர்; அண்ணன்மார் சுவாமி கதை, தீரன் சின்னமலை கவியம் உட்பட 15 நூல்களை எழுதியுள்ளார். கருணாநிதி எழுதிய "பொன்னர் சங்கர்' வரலாற்று நாவல், இவரது அண்ணன்மார் சுவாமி கதை மூலத்தை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டது. "தீரன் சின்னமலை காவியம்' "பசுஞ்சோலை பயணம்' ஆகிய நூல்களுக்கு பாரத ஸ்டேட் வங்கியின் சிறப்பு பரிசு வழங்கப்பட்டுள்ளது. ஏ.பி.டி., நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி ஓய்வு பெற்ற இவர், தற்போது வடவள்ளி-தொண்டாமுத்தூர் ரோட்டிலுள்ள வள்ளலார் நகரில் வசித்து வருகிறார்.


AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்