9. கோவையின் குலம் காக்கும் வேலய்யா...!

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

தமிழிலும் கொங்குத் தமிழுக்கென்று ஓர் உயர்ந்த இடமுண்டு. அந்த கொங்கு மண்ணிலே தமிழ்க் கடவுளான முருகன் வீற்றிருக்கும் உயர்ந்த மலைதான், மருதமலை. அரிய மூலிகைகளையும், அற்புதமான மரங்களையும் கொண்ட குளுமையான இந்த மலைக்கு "மருந்து மலை' என்றும் ஒரு பெயருண்டு.
ஒலி எழுப்பும் தன்மையுடைய மரங்களும் மருதமலையின் இயற்கைச்சூழலில் அமைந்துள்ளதாக பேரூர்ப்புராணத்தில் சொல்கிறார் கச்சியப்ப முனிவர். கடல் மட்டத்திலிருந்து 600 அடி உயரத்தில் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்திலுள்ள இந்த மலையில்தான், சுப்ரமணியரின் அருட்சுடர் பரவும் அற்புத திருக்கோவில் அமைந்துள்ளது.
மலையடிவாரத்தில், இடப்பகுதியில் "வள்ளியம்மன் திண்டு' உள்ளது. அங்கே வழிபட்டு விட்டு, 600 படிகளைக் கடந்தால், சிரசில் கண்டிகையுடன், பின்பக்கம் குடுமியுடன், கோவணங்கொண்டு வலது கரத்தில் தண்டேந்தி, இடது கரத்தைத் திருவரையில் அமைத்துப் புன்முறுவல் சிரிப்புடன் அருள் தருவார் திருமுருகன்.
பழங்காலத்தில் இவ்விடத்தில் அருவுருவத் திருமேனியாக வள்ளிதெய்வானை முருகப்பெருமானை அமைத்து வழிபட்டனர். திருமேனிகளின் அடையாளமாக மூன்று ஓங்கார வடிவக் கற்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழ்ச்சித்தர் மரபில் பல்வேறு காலத்தில் பல்வேறு சித்தர்கள் இங்கு வழிபாடு செய்துள்ளனர்.
பாம்பாட்டிச் சித்தர் இன்றளவில் சமாதி நிலையில் இருந்து வழிபடும் தலமாக இது அமைந்துள்ளது. மருதமலையில் மருததீர்த்தம், சரவணப்பொய்கை, கன்னிகை தீர்த்தம், பாம்பாட்டி சுனை, அனும தீர்த்தம் ஆகிய பலவகை தீர்த்தங்கள் உள்ளது.
பேரூர்ப்புராணத்தை இயற்றிய கச்சியப்ப முனிவர் படைத்த 36 படலங்களில், ஒன்றுதான் மருதவரைப் படலம். மருதமலை முருகப்பெருமானை நேரில் கண்டு வணங்கி, சித்தர்கள், முருக பெருமானை வழிபட்ட முறையினை உலகத்தமிழர்களுக்கு எடுத்துரைத்தவர். மலர் அர்ச்சனை, திருவிளக்கேற்றல், திருவமுது, திருமஞ்சனம் என இதிலே பல வழிபாடுகள் விளக்கப்பட்டுள்ளன.
முருகனுக்கான திருவிழாக்கள்: சூரசம்ஹார விழா, தைப்பூசவிழா, ஆடிக்கிருத்திகை விழா ஆகியவை ஆண்டுக்கு ஒரு முறையும், மாதம்தோறும் கிருத்திகை, வளர்பிறை சஷ்டி, விசாகம் நாட்களில் முருகனுக்கு சிறப்பு வழிபாடுகளும் வெகு சிறப்பாக நடக்கின்றன. குளுகுளு கோவைக்கு வருவோர் பெரும்பாலும், திருமுருகனைத் தரிசிக்காமல் திரும்புவதே இல்லை.


AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்