KOVAI DAY | 6. சிறுதுளி... செய்வது பெரும் பணி!| Dinamalar

6. சிறுதுளி... செய்வது பெரும் பணி!

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

குகைகளை விட்டு வெளியேறிய ஆதி மனிதர்கள் ஆற்றுப்படுகையை அடைந்த பிறகுதான் நாகரிக வாழ்க்கையை வாழத்துவங்கினர் என்கிறது வரலாறு. இந்திய வரலாற்றை ஆய்வு செய்த அறிஞர்கள் பலர் "நதிக்கரைகள்தான் நாகரிகத்தின் தொட்டில்' என்று வர்ணிக்கின்றனர்.
கொங்கு நாட்டின் நாகரீகத் தொட்டிலாக விளங்கிய நொய்யல் நதியில் இன்று ஆலைக்கழிவும், சாயக்கழிவும் கலந்து விஷமாக மாறிப்போனது. நம்மை வாழ வைத்த ஆறு, நம் கண் முன்னே சாக்கடையாக மாறி உருக்குலைந்து போனதை கண்டு யாரும் கவலைப்படாத போது, இந்த நதிக்கு புத்துயிர் கொடுக்க புறப்பட்ட அமைப்புதான் "சிறுதுளி'.
2003ல் துவங்கப்பட்ட "சிறுதுளி' அமைப்பு, நொய்யலை தூர் வாரி தூய்மைப்படுத்தும் பணியில் முதலில் களம் இறங்கியது.
இவ்வமைப்பின் முயற்சியால், அரசு இயந்திரம் அசைய ஆரம்பித்தது; ஓடைகள் உயிர் பெற்றன; குளங்கள் நீரால் நிரம்பிக் குளிர்ந்தன. கோவையின் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்தது; பசுமைப் பரப்பும் பாதுகாக்கப்பட்டது.
இப்போது, கோவையையே குளிர்விக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார் இவ்வமைப்பின் நிறுவன அறங்காவலர் வனிதா மோகன். இதற்காக, "பசும்புலரி' என்ற பசுமைத் திட்டம் உருவாக்கப்பட்டு பல ஆயிரம் மரக்கன்றுகள் பணி நடந்து வருகிறது. சமீபத்தில், அப்துல் கலாமை அழைத்து வந்து, அவரது கையாலேயே "கலாம் வனம்' அமைத்தது இவ்வமைப்பு.
"ராக்' அமைப்புடன் இணைந்து செயல்படும் இத்திட்டத்தின் மூலம் கோவை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் உள்ள கிராமங்களில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடுவதே "பசும்புலரி'யின் நோக்கம்.
"ஒரு லட்சம் மரங்களை நட்டு வளப்பது என்பது சிறுதுளியின் முதல் கட்ட இலக்கு, எங்களது நோக்கம், கோவை பகுதியில் 33 சதவீத பசுமை பரப்பை உருவாக்குவதுதான்'' என்கிறார் வனிதா மோகன். மாசடை காற்றுக்கு மாற்று மருந்தாக மரங்களை உருவாக்கி வரும் "சிறுதுளி'யின் பசுமைக்கனவு நனவாக, நாமும் கரம் கொடுப்போம்;ஆளுக்கொரு மரம் வளர்ப்போம்.


AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.