மூலவரின்றி தீர்த்தங்கரர் கோவிலில் வழிபாடு : தீபத்தை மட்டுமே வணங்கும் பக்தர்கள் | மூலவரின்றி தீர்த்தங்கரர் கோவிலில் வழிபாடு : தீபத்தை மட்டுமே வணங்கும் பக்தர்கள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மூலவரின்றி தீர்த்தங்கரர் கோவிலில் வழிபாடு : தீபத்தை மட்டுமே வணங்கும் பக்தர்கள்

Added : டிச 21, 2011
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

ஈரோடு : விஜயமங்கலத்தில் ஆயிரமாண்டு பழமையான சமண தீர்த்தங்கரர் கோவிலில், மாயமான சிலைகள் இதுவரை கண்டுபிடிக்காததால், தீபத்தை மட்டுமே பக்தர்கள் வணங்குகின்றனர். பெருந்துறை தாலுகா, விஜயமங்கலம், ஜெயினபுரத்தில், இந்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில், 1,500 ஆண்டுகள் பழமையான சந்திரதீர்த்தங்கரர் கோவில் உள்ளது. "நெட்டை கோபுரம்' என்று அப்பகுதி மக்களால் இக்கோவில் அழைக்கப்படுகிறது. சமண மதத்தின் ரிஷபா நாதா, ரிஷபா அஜிதா நாதா, ஷம்பவா நாதா, அபிறந்தனா நாதா, பத்மபிரபா நாதா, புஷ்பதந்தா நாதா, மகாவீரர் உள்ளிட்ட 24 தீர்த்தங்கரர்களுக்கும், தர்ம தேவதைக்கும், தினந்தோறும் ஒரு ஜெயின் குடும்பத்தினர் பூஜை செய்து வருகின்றனர். அதேபோல், தமிழக அரசின் ஒரு கால பூஜை நிரந்தர வைப்புத் திட்டத்தின் மூலம் நடந்து வருகிறது.
தீர்த்தங்கரர்கள் தவம் புரியும் நிலையில் சிலைகள் இருப்பதாலும், இயற்கை எழிலுடன் கூடிய கோவில் என்பதாலும், தினந்தோறும் சுற்றுலா பயணிகள் குவிகின்றனர். இக்கோவில் மூலவராக, முதலாவது தீர்த்தங்கரரான ரிஷப நாதர் சிலை இருந்தது. நான்கு ஆண்டுகளுக்கு முன், இச்சிலை திருட்டு போனது. இந்திய தொல்லியல் துறை, போலீஸாரிடம் புகார் தெரிவித்தும், இதுவரை சிலை மீட்கப்படவில்லை. வழிபாட்டுக்கு சிலை இல்லாததால், தீபத்தை கடவுளாக நினைத்து வழிபட்டு வருகின்றனர். மாயமான சிலையை மீட்டு தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள் கூறியதாவது:
இக்கோவிலை, 1958ம் ஆண்டு பழங்கால நினைவுசின்னம், தொல் பொருள் ஆய்வு இடங்கள், எஞ்சிய பகுதி சட்டத்தின் கீழ், தொல்லியல் துறையினர் பாதுகாத்து வருகின்றனர். பழங்கால நினைவு சின்னங்களை சிதைப்பவருக்கு, ஒரு லட்சம் ரூபாய் அபராதமும், இரண்டாண்டு சிறை தண்டனையும் விதிக்கப்படும். ஆனால், தீர்த்தங்கரர் கோவிலுக்கு போதிய பாதுகாப்பில்லாமல், நான்காண்டுக்கு முன், கோவிலில் இருந்த ரிஷபநாதர் சிலை திருட்டு போனது. சிலை மீட்க போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை. தீபத்தையே தீர்த்தங்கரராக நினைத்து, பக்தர்கள் வழிபடுகின்றனர். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X