அடாவடி அதிகாரிகளுக்கு "சவுக்கடி': டி.எஸ்.பி., கைது பற்றி கருத்து| Dinamalar

தமிழ்நாடு

அடாவடி அதிகாரிகளுக்கு "சவுக்கடி': டி.எஸ்.பி., கைது பற்றி கருத்து

Added : ஜூலை 14, 2010
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

நாமக்கல்: "பலமான அரசியல் பின்னணியை கொண்ட போலீஸ் டி.எஸ்.பி., லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்டிருப்பது, அடாவடி அதிகாரிகளின் செயல்களுக்கு "சவுக்கடி' கொடுக்கும் விதத்தில் அமைந்துள்ளது'
என, நேர்மையான போலீஸ் அதிகாரிகள்  தெரிவிக்கின்றனர்.


அரசுத் துறையில் பணிபுரிவோரில் பலர்  கடமையை செய்வதற்கு "லஞ்சம்' வாங்குவதை ஒரு குற்றமாகவே நினைப்பதில்லை. வாரம் மற்றும் மாதந்தோறும் தங்களது துறையில் இருந்து குறிப்பிட்ட தொகை கமிஷனாக வரவேண்டும் என, உயரதிகாரிகள் நிர்பந்தம் செய்வது போன்றவையே இதற்கு முக்கிய காரணம் என்கின்றனர் அரசுத்துறை அதிகாரிகள்.லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் அவ்வப்போது கண்காணித்து கடும் நடவடிக்கை எடுத்தாலும், லஞ்சம் வாங்குவது முற்றிலுமாக ஒழியவில்லை.கடந்த வாரம் கோவை மாவட்டத்தை சேர்ந்த டி.ஆர்.ஓ., ஒருவரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் கைது செய்தனர்.அதை தொடர்ந்து, நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த போலீஸ் டி.எஸ்.பி., சீனிவாசன் என்பவர் லஞ்சம் வாங்கியபோது, லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.பலமான அரசியல் செல்வாக்கை பின்னணியாக கொண்ட டி.எஸ்.பி., சீனிவாசன் கைது செய்யப்பட்டது போலீஸார் வட்டாரத்தில் மட்டுமின்றி அரசியல்வாதிகள் மட்டத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்தக் கைது நடவடிக்கை அடாவடி அதிகாரிகளின் செயல்களுக்கு "சவுக்கடி' கொடுக்கும் விதத்தில் அமைந்துள்ளது, என்று சில நேர்மையான போலீஸ் உயரதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.


இது குறித்து போலீஸ் உயரதிகாரிகள் சிலர் கூறியதாவது:லஞ்ச வழக்கில் சிக்கிய போலீஸ் டி.எஸ்.பி., சீனிவாசன் அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி, சில போலீஸ் அதிகாரிகளின் பணியை ஓவர் லுக் செய்துள்ளார். கடந்த 2002ல்  ராசிபுரம் இன்ஸ்பெக்டராக இருந்தபோது, விசைத்தறி தொழிலாளர் பிரச்னையில் "அன்பளிப்பு' பெற்றுக் கொண்டு, தொழிலாளர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தாக புகார் கூறப்பட்டது. தற்போது, கோழிப்பண்ணை விவகாரம் தொடர்பாக லஞ்சம் வாங்கிய போது, லஞ்ச ஒழிப்பு போலீஸில் சிக்கியுள்ளார்.  பலமான அரசியல் பின்னணி கொண்ட டி.எஸ்.பி., சீனிவாசன் கைது நடவடிக்கை, அடாவடி அதிகாரிகளின் செயல்பாடுகளுக்கு சவுக்கடி கொடுக்கும் விதத்தில் அமைந்துள்ளது, என்றனர்.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை