காங்., தலைவருக்கு எதிராக "ஃபேக்ஸ்': கரூர் மாவட்ட சேவாதள நிர்வாகிகள் அதிரடி| Dinamalar

காங்., தலைவருக்கு எதிராக "ஃபேக்ஸ்': கரூர் மாவட்ட சேவாதள நிர்வாகிகள் அதிரடி

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

கரூர்: கரூர் மாவட்ட காங்கிரஸ் தலைவரை, பதவியில் இருந்து நீக்க கோரி, மாவட்ட சேவாதள நிர்வாகிகள், கட்சி தலைமைக்கு "ஃபேக்ஸ்' அனுப்பியுள்ளனர். கரூர் மாவட்ட காங்கிரஸ் சேவாதள புதிய தலைமை அமைப்பாளராக செல்வராஜ்  நியமனம் செய்யப்பட்டுள்ளதாக, மாவட்ட காங்கிரஸ் தலைவர் சுப்பிரமணியன் அறிவித்தார். "அகில இந்திய சேவாதள தலைவரின் ஒப்புதல் பெற்றே, மாவட்ட தலைவரை, மாநில தலைவர் நியமிக்க வேண்டும் என்பதால், மாவட்ட காங்கிரஸ் தலைவர் சுப்பிரமணியன் அறிக்கை செல்லாது' என, ஏற்கனவே பொறுப்பில் உள்ள ராஜேஷ் அறிவித்தார்.


இந்நிலையில், "கரூர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சுப்பிரமணியத்தை பதவியில் இருந்து நீக்க வேண்டும்' என்று நிர்வாகிகள், சோனியா மற்றும் ராகுல்காந்திக்கு "ஃபேக்ஸ்' அனுப்பினர். "ஃபேக்ஸ்' ல் உள்ளதாவது: அகில இந்திய காங்கிரஸ் சேவாதள தலைவர் மகேந்திர ஜோஷி, கரூர் மாவட்ட சேவாதள தலைமை அமைப்பாளர் ராஜேஷ் மாற்றப்பட ஒப்புதல் வழங்கவில்லை.  மாநில சேவாதள பொறுப்பாளர் மக்னாய்க்கிடம் தொடர்பு கொண்டு தெளிவுபடுத்திக்கொள்ள தெரிவித்தும், மாவட்ட காங்கிரஸ் தலைவர் சுப்பிரமணியம், மாவட்ட சேவாதளத்தில் குழப்பம் ஏற்படுத்த தவறான தகவலை வெளியிட்டுள்ளார். கட்சி நலன் கருதி அவரை மாவட்ட காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும்.இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.


Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.