Real Story- Vivekandar Illam | விவேகானந்தர் இல்லம் உருவான கதை- எல்.முருகராஜ்| Dinamalar

விவேகானந்தர் இல்லம் உருவான கதை- எல்.முருகராஜ்

Added : மார் 03, 2012 | கருத்துகள் (3)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement

இந்தியா பற்றிய மேலைநாடுகளின் பார்வையை தனது பிரசங்கத்தால் மாற்றியமைத்த சுவாமி விவேகானந்தர் 9 நாட்கள் தங்கியிருந்து, புகழ் பெற்ற 9 சொற்பொழிவுகள் ஆற்றிய இடமே சென்னை மெரினா எதிரே உள்ள விவேகானந்தர் இல்லம். சுவாமியின் சீடர்கள் இந்த கட்டிடத்தை 1906-ம் ஆண்டு, 19,700 ரூபாய்க்கு வாங்க முயற்சித்த போது 1000 ரூபாய் குறைவாக இருந்த காரணத்தால் வாங்கமுடியாமல் போன கட்டிடம். தற்போது குத்தகைக்கு எடுக்கப்பட்டு 65 லட்சம் ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்டு உள்ளது. இப்படி பல சுவாராசியமான தகவல்களைக் கொண்ட சென்னை விவேகானந்தர் இல்லத்தின் நிஜக்கதை இந்த வாரம்.

உலகின் நீளமான அழகிய கடற்கரையான சென்னை மெரினாவின் எதிரே அழகையும், கம்பீரத்தையும் ஒருங்கே தன்னகத்தே கொண்டபடி நிற்கிறது விவேகானந்தர் இல்லம். அமெரிக்காவின் மாசசூட்ஸ் என்ற இடத்தைச் சேர்ந்த தியூடர் ஐஸ் கம்பெனியின் நிறுவனரான பிரடெரிக் தியூடர் என்பவரால் 1842ல் கட்டப்பட்டது.


அப்போது சென்னையில் இருந்த வெளிநாட்டவரின் தேவைக்காக "தியூடர் ஐஸ்' கம்பெனியில் இருந்து கப்பலில் கொண்டுவரப்பட்ட ஐஸ்கட்டிகள் இங்கு சேமித்து வைக்கப்பட்டது, அந்த வகையில் இன்றும் கூட "ஐஸ் ஹவுஸ்' என்ற பெயரும் இந்த கட்டிடத்திற்கு உண்டு.


பின்னர் ஐஸ் தயாரிக்கும் தொழில் நுட்பம் இங்கேயே வந்த பிறகு இந்த கட்டிடத்தை பிலிகிரி ஐயங்காருக்கு தியூடர் ஐஸ் நிறுவனம் விற்றுவிட்டது. பிலிகிரி ஐயங்கார் இந்த கட்டிடத்தை, ஏழைகள் மற்றும் கல்வியறிவில் பின்தங்கியவர்களுக்கான புகலிடமாக மாற்றியமைத்தார்.


சுவாமி விவேகானந்தர் அமெரிக்காவின் சிகாகோவில் வரலாற்று புகழ்மிக்க சொற்பொழிவை நிகழ்த்திவிட்டு தாயகம் திரும்பியவர் 1897ம் ஆண்டு பிப்ரவரி 6ம் தேதி முதல் 15 ம் தேதி வரை ஐஸ்ஹவுசில் இந்த கட்டிடத்தில் தங்கியிருந்தார். இங்கு தங்கியிருந்த போது அவர் புகழ் பெற்ற ஒன்பது சொற்பொழிவுகளை நிகழ்த்தினார்.


கல்கத்தா சென்ற சுவாமி விவேகானந்தர், அங்கு ராமகிருஷ்ணர் மடத்தில் பணியாற்றிக் கொண்டு இருந்த சுவாமி ராமகிருஷ்ணானந்தரை இங்கு அனுப்பிவைத்தார். சசிமகராஜ் என்றழைக்கப்பட்ட சுவாமி ராமகிருஷ்ணானந்தரின் தொண்டால் இந்த கட்டிடம் தென்னகத்தின் முதலவாது ராமகிருஷ்ணர் மடமாக செயல்பட்டது.


பின்னர் கட்டிட உரிமையாளர் பிலிகுரியின் மறைவிற்கு பிறகு பொருளாதார சிக்கல் காரணமாக பல்வேறு நபர்களின் கைகளுக்கு மாறி கடைசியாக 79 ஆயிரத்து 944 ரூபாய்க்கு அன்றைய ஆங்கில அரசால் வாங்கப்பட்டது.


சுதந்திரத்திற்கு பிறகு தமிழக அரசு நிர்வாகத்தின் கீழ்வந்ததும் பல்வேறு சமூக நல சங்கங்களுக்கு வாடகைக்கு விடப்பட்டது. பின் பலகாலம் பராமரிப்பின்றி மூடப்பட்டிருந்தது. 1997ம் ஆண்டு சுவாமி விவேகானந்தர் தாயகம் திரும்பிய நூற்றாண்டை முன்னிட்டு ஸ்ரீராமகிருஷ்ணமடம் இந்த கட்டிடத்தை விலைக்கோ அல்லது குத்தகைக்கோ கேட்டதில் அரசு குத்தகைக்கு விட்டுள்ளது. குத்தகை காலம் 2020ம் ஆண்டுவரை உள்ளது.


பொதுமக்களிடம் இருந்த நன்கொடையாக பெறப்பட்ட 65 லட்சம் ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்ட விவேகானந்தர் இல்லமே தற்போது நீங்கள் காண்பது. இந்த கட்டிடத்தின் மூன்று தளங்களுமே சுவாமி விவேகானந்தரின் பெருமையை பறைசாற்றும் விதத்தில் உள்ளது.


அடித்தளம் இந்த கட்டிடம் ஐஸ் ஹவுசில் இருந்து விவேகானந்தர் இல்லமாக மாறிய வரையிலான கதையைச் சொல்கிறது. முதல் தளம் இந்திய கலாச்சாரத்தை விவரிக்கிறது. இரண்டாவது தளம் விவேகானந்தரின் புகைப்படக்கண்காட்சி இடம் பெற்றுள்ளது


விவேகானந்தர் தங்கியிருந்த அறை தியான மண்டபமாக விளங்குகிறது. புத்தக விற்பனை நிலையம் உள்ளது. இப்போது இங்கு புதிய வரவாக இந்தியாவிலே முதல் முறையாக உருவாக்கப்பட்டுள்ள பார்க்க பரவசமூட்டும் முப்பரிமாண (3டி) காட்சிக்கூடம் உள்ளது. இதே போல முப்பரிமாண கண்ணாடிகூடும் ஆச்சரியத்தை ஏற்படுத்தும்.


மிக சுத்தமான பராமரிப்பு, புன்னகை தவழ உதவும் தொண்டர்கள், அமைதியான சூழல், அற்புதமான புகைப்படங்கள் மற்றும் ஒவியங்களுடன் ஒரு அரிய காலப்பெட்டகமாகவும், விவேகானந்தரின் முழுப்பரிமாணத்தையும் சொல்லும் இந்த விவேகானந்தர் இல்லம் அனைவரும் அவசியம் பார்க்கவேண்டிய இடமாகும்.


தினமும் காலை 10 மணியில் இருந்து மதியம் 12 மணிவரையிலும், மாலை 3 மணிமுதல் இரவு 7 மணிவரையிலும் செயல்படும். புதன்கிழமை வாரவிடுமுறை.


பள்ளிக்குழந்தைகளுக்கு சலுகை கட்டணம் உண்டு. மேலும் விவரத்திற்கு போன் எண்:044-28443742


Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
krishnang - xhennai ,இந்தியா
15-ஏப்-201206:43:10 IST Report Abuse
krishnang good
Rate this:
Share this comment
Cancel
Sen - Chennai,இந்தியா
13-மார்-201200:24:58 IST Report Abuse
Sen It was really nice to know about this information. Really informative and to be appreciated. Its always wonderful and a good feeling to get to know about the significance of any memorial and, that too in and around our hometown. Thank you very much and keep doing the good work in spreading this kind of historical and useful information
Rate this:
Share this comment
Cancel
mohamathafathimaa - kumbakonam,இந்தியா
04-மார்-201208:15:56 IST Report Abuse
mohamathafathimaa நம் நட்டு வரலாறை அழிய விடாமல் மக்கள்கு எடுத்து சொல்லும் உண்மை கதையை மிக்க மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம் . அதுபோல நம் நட்டு பழமையான மருத்துவம் பத்தின வரலாறை மக்கள்கு எளிமையாக புரியும் படி எடுத்து சொன்னால் மருந்து மாத்திரை இன்றி நோய் வராமல் காத்துக்கொள்ளலாம் நன்றி .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை