Real Story- Valluvar Kottam | சென்னை வள்ளுவர் கோட்டத்தின் கதை- எல்.முருகராஜ்| Dinamalar

சென்னை வள்ளுவர் கோட்டத்தின் கதை- எல்.முருகராஜ்

Added : மார் 10, 2012 | கருத்துகள் (6)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement

கட்டி முடித்து கிட்டத்தட்ட 35 ஆண்டுகளாகியும் நேற்றுதான் கட்டியது போல கலையழகும், கம்பீரமும் குறையாமல் காணப்படும் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வள்ளுவர் கோட்டம் "பாஸ்ட் புட்' போல போகிற போக்கில் பார்க்கக்கூடிய இடமல்ல. நின்று நிதானித்து குறளோடும், குறள் தரும் சிற்பங்களோடும் நாளெல்லாம் பார்த்து ரசிக்கவேண்டிய இடமாகும்.

'கடுகைத் துளைத்து ஏழ் கடலைப் புகட்டிக் குறுகத் தரித்த குறள்' என்று இடைக்காட்டராலும் 'அணுவைத் துளைத்து ஏழ் கடலைப் புகட்டிக் குறுகத் தரித்த குறள் ' என்று ஒளவைப் பெருமாட்டியாலும் சிறப்புற போற்றப்பட்ட, உலகப் பொதுமறையாம் திருக்குறளை இயற்றிய திருவள்ளுவருக்கு சிறப்பு செய்யப்பட வேண்டும் என்ற, தமிழ் சான்றோர்களின் நீண்ட காலக்கனவை நனவாக்கும் வகையில் ஐந்து ஏக்கரில் கலை நுணுக்கத்தோடு வள்ளுவர் கோட்டம் வடிவமைக்கப்பட்டது.


அழகிய தோரணவாயிலும் அதைத் தொடர்ந்த புல்வெளியும், அறம், பொருள், இன்பம் என்ற திருக்குறளின் 1330 பாக்களும் திறந்த புத்தக வடிவில் சலவைக்கல்லில் பொறிக்கப்பட்டுள்ளது. மேலும் திருவள்ளுவரை போற்றும் திருவள்ளுவர் மாலை பாக்களும் பொறிக்கப்பட்டுள்ளது.


கோட்டத்தின் மேல்தளமான வேயா மாடத்தில் திருக்குறளின் முப்பாலை குறிக்கும் வகையில் மூன்று விரல்களை உயர்த்திய நிலையில் அழகிய பீடத்தில் ஒளிமிக்க கருங்கல்லினாலாகிய திருவள்ளுவர் சிலை உயிரோட்டமாக அமைக்கப்பட்டுள்ளது.


ஆசியாவில் உள்ள மிகப்பெரிய அரங்கங்களில் ஒன்றானதும், தூண்களே இல்லாமல் அமைக்கப்பட்டுள்ளமான இங்குள்ள அரங்கத்தில் நான்காயிரம் பேர் வரை அமர்ந்து நிகழ்ச்சிகளை பார்க்கமுடியும்.


எல்லாவற்றிக்கும் மேலாக திருவாரூர் தேரையே இழுத்து வந்தது போல செதுக்கி வைத்துள்ள சிற்பத் தேரானது வள்ளுவர் கோட்டத்தின் மணிமுடியாய் திகழ்கின்றது. இந்த சிற்பத்தேரின் பீடம் பளிங்கு கல்லால் அமைந்துள்ளது. ஏழு அடி உயரமுள்ள இரண்டு பளிங்கு கல் யானைகள் தேரை இழுப்பது போல அமைக்கப்பட்டுள்ளது. ஒரு பக்கத்திற்கு நான்கு சக்கரம் என இரண்டு பக்கமும் எட்டு பிரம்மாண்டமாக சக்கரங்கள் உளளது. தேரின் கருங்கல் சக்கரத்தின் குறுக்களவு 11 1/2 அடியும், பருமன் 2 1/2 அடி என்றால் சக்கரத்தின் பிரம்மாண்டத்தை உணரலாம்.


தேரின் அடித்தள அடுக்குகளில் நுண்ணிய வேலைப்பாடுடைய சிற்பங்கள் உள்ளன. இந்த சிற்பங்கள் அனைத்தும் பல குறள்பாக்களை விளக்குகின்றன. இந்த கோட்டத்தை 2500 சிற்பக்கலைஞர்கள் ஒருங்கிணைந்து உருவாக்கினார்கள் என்பதும், தேருக்கு திருவண்ணாமலையில் இருந்தும், யானைக்கு பட்டுமலை குப்பத்தில் இருந்தும் என்று தேடித்தேடி கற்கள் கொண்டு வந்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.


ஒவ்வொரு சனிக்கிழமை காலை 10 மணி முதல் மதியம் 1 மணிவரை திருக்குறள் ஆய்வரங்கம் நடைபெறும். விருப்பமுள்ளவர்கள் கலந்து கொள்ளலாம். வள்ளுவர் கோட்டத்திற்கு விடுமுறையே கிடையாது; வருடம் முழுவதும் திறந்தே இருக்கும். அனுமதிக் கட்டணம் பெரியவர்களுக்கு மூன்று ரூபாயும், சிறுவர்களுக்கு இரண்டு ரூபாயும் வாங்குகிறார்கள். இங்குள்ள அரங்கில் அடிக்கடி கைவினைப் பொருள் கண்காட்சி போல ஏதாவது கண்காட்சி நடந்துகொண்டே இருக்கும். அப்படி கண்காட்சி நடக்கும் நாட்களில் அனுமதி இலவசமாகும்.


செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் நடத்தப்படும் இந்த வள்ளுவர் கோட்டத்தை தங்களது சொந்த கட்டிடம் போல நன்கு பராமரித்துவரும் அலுவலர்கள், எந்த விவரம் கேட்டாலும் தெளிவாக கூறுகிறார்கள். வாகன நிறுத்த தொல்லை, மக்கள் நெரிசல் இல்லாமல் நல்ல காற்றோட்டத்துடன் நகரின் மையத்தில் உள்ள வள்ளுவர் கோட்டம் குடும்பத்துடன் சுற்றிப்பார்க்க சிறந்த இடமே. மேலும் விவரத்திற்கு போன் எண்: 28172177.


Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
selva - vellore  ( Posted via: Dinamalar Android App )
21-ஏப்-201209:20:54 IST Report Abuse
selva வள்ளுவர் கோட்டம் சுத்தம் குறைவாக உள்ளது.பராமரிப்பு அவசியம்
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Krishnaveni skv - cbe,இந்தியா
17-மார்-201212:17:00 IST Report Abuse
Srinivasan Krishnaveni     skv அட ராமா இதை படிச்சா அம்மையாருக்கு சாமி வருமே... ஐயா யாரு கண்டது குப்பத்துவாசிகளுக்கு தருமா aasupaththiru
Rate this:
Share this comment
Cancel
Dinakaran Ramasamy - Tezpur, Assam,இந்தியா
11-மார்-201209:49:08 IST Report Abuse
Dinakaran Ramasamy அய்யா தினமலர் ஆசிரியரே, இந்த தகவல் தமிழக முதல்வரின் காதுக்குப் போனால், சென்னை மக்களுக்கு இன்னுமொரு மருத்துவமனை நிச்சயம். புண்ணியாமா போச்சு உங்கள் கட்டுரை.
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Natarajan - Istanbul,துருக்கி
10-மார்-201217:33:35 IST Report Abuse
Srinivasan Natarajan தயுவு செய்து இதை கட்டியவர் பெயரை வெளியிடுங்கள்.
Rate this:
Share this comment
Boopathy - Coimbatore,இந்தியா
11-மார்-201212:40:52 IST Report Abuse
Boopathyஇவரது கலைத் திறமைகளுக்குச் சான்றுகள் பல உள்ளன. சென்னையில் உள்ள வள்ளுவர் கோட்டத்தை வடிவமைத்தவர் இவர்தான். தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகக் கட்டடமும் இவரது கைவண்ணம்தான். பல புகழ்பெற்ற இந்துக் கோவில்களை உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் வடிவமைத்தவர் இவர்தான். உச்சமாக, கன்னியாகுமரியில் கடல்நடுவே பாறையின் மீது கம்பீரமாக எழுந்து நிற்கும் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையை வடிவமைத்தவரும் கணபதி ஸ்தபதிதான். தமிழகத்திலேயே மிகப் பெரிய சிலை இதுதான் என்பதும் குறிப்பிடத்தக்கது....
Rate this:
Share this comment
Boopathy - Coimbatore,இந்தியா
03-ஏப்-201318:26:54 IST Report Abuse
Boopathyஉலகப் புகழ்பெற்ற சிற்பி வை. கணபதி ஸ்தபதி. சென்னையில் உள்ள வள்ளுவர் கோட்டத்தை வடிவமைத்தவர் இவர்தான். தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகக் கட்டடமும் இவரது கைவண்ணம்தான். பல புகழ்பெற்ற இந்துக் கோவில்களை உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் வடிவமைத்தவர் இவர்தான். உச்சமாக, கன்னியாகுமரியில் கடல்நடுவே பாறையின் மீது கம்பீரமாக எழுந்து நிற்கும் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையை வடிவமைத்தவரும் கணபதி ஸ்தபதிதான். தமிழகத்திலேயே மிகப் பெரிய சிலை இதுதான் என்பதும் குறிப்பிடத்தக்கது. ...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை