Real_Story- Dhakshin Chitra | சென்னை தட்சிண சித்ரா உருவான கதை- எல்.முருகராஜ்| Dinamalar

சென்னை தட்சிண சித்ரா உருவான கதை- எல்.முருகராஜ்

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் 25 கிலோமீட்டர் தூரத்தில் முட்டுக்காட்டில் எம்.ஜி.எம்.,ஐ அடுத்துள்ளது தட்சிண சித்ரா.
நமது முன்னோர்களின் பிரம்மாண்டமான வாழ்க்கை முறையையும், அவர்கள் வாழ்ந்த இல்லங்களையும் கண்ணாரக் கண்டுவர, தென்னகம் முழுவதும் பயணப்பட்டாலும் கூட காணமுடியாத விஷயங்களை இங்கே ஒரே இடத்தில் பார்க்கலாம்.

அமெரிக்காவைச் சேர்ந்த டெபோரா தியாகராசன் தமிழகத்திற்கு வந்ததும், தென்னகம் முழுவதையும் சுற்றிப்பார்த்தார். அப்போது இங்குள்ள நமது மக்களின் வாழ்க்கை முறை, கலாச்சாரம், கலை, பண்பாடு ஆகியவை அவருக்கு மிகவும் பிடித்துப்போனது.
இவருக்கு எந்தெந்த விஷயங்கள் எல்லாம் நம்மிடம் பிடித்துப்போனதோ, அந்த விஷயங்கள் எல்லாம் நமது வேகமான மற்றும் நகரமயமான வாழ்க்கை முறையால் நமக்கு பிடிக்காமல் போய்க்கொண்டு உள்ளது என்பது கசப்பான ஆனால் உண்மையான விஷயம்.

இதை உணர்ந்த டெபோரா தியாகராசன், எப்படியெல்லாம் நமது முன்னோர்கள் வாழ்ந்தார்கள் என்பதை , கிராமத்தின் வாசனையே அறியாத நகர்ப்புற குழந்தைகளுக்கும், வரும் தலைமுறையினருக்கும் சொல்ல வேண்டும் என்று விருப்பப்பட்டார். அவரது விருப்பமே தட்சிண சித்ராவாக வடிவெடுத்துள்ளது.
10 ஏக்கர் பரப்பளவில் தமிழகம், ஆந்திரா, கேரளா மற்றும் கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற 17 நிஜமான வீடுகள் உள்ளே உள்ளது. உதாரணமாக காரைக்குடி பகுதியில் உள்ள செட்டிநாடு வீட்டை அப்படியே தத்ரூபமாக கட்டியுள்ளார்கள். வீட்டிற்குள்ளும் அவர்கள் உபயோகித்த பொருட்களை கண்காட்சியாக வைத்துள்ளார்கள். நெசவாளர் வீடு என்றால் ஓரு நெசவாளர் உட்கார்ந்து நெய்து கொண்டு இருக்கிறார். குயவர் வீடு என்றால் மண்பாண்ட பொருட்கள் செய்து கொண்டு இருக்கின்றனர்.

இதே போல இதர மாநிலத்தின் வீடுகளும் அம்மாநில கலாச்சாரத்தை பிரதிபலித்துக் கொண்டு உள்ளது. அய்யனார் சிலையும், கிராமத்து குதிரை சிலைகளும் டெரகோட்டா சிற்பங்களும் தங்களது பெருமையை பறைசாற்றியபடி நிற்கின்றன.
தட்சிண சித்ராவில் உள்ள குயவர்கள் உருவாக்கிய 10 மண் குதிரைகள் சிங்கப்பூருக்கு சென்றுள்ளது என்பது இங்குள்ள குயவர்களின் திறமைக்கு பாரட்டு பெற்றுத் தரும் ஒரு விஷயமாகும்.

மேலும் இங்கு தப்பாட்டம், கரகாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்ட பராம்பரிய நடனங்கள் அந்தந்த நடன கலைஞர்களைக் கொண்டு நடத்தப்படுகின்றன. சுற்றுச்சுழலை கெடுக்காத பனை ஒலை பொருட்கள், கண்ணாடியில் சிற்பம் செய்வது, களிமண்ணில் பானைகள் செய்வது எப்படி என்று சொல்வது மட்டுமில்லாமல், விருப்பம் உள்ளவர்களுக்கு சொல்லியும் கொடுக்கிறார்கள். ஒரு பக்கம் ஒவிய கண்காட்சியும் நடைபெறுகிறது. இன்னொரு பக்கம் புகைப்படக்கண்காட்சி நடக்கிறது. பராம்பரியம் பற்றி சொல்லும் நூலகம் உண்டு. வார இறுதி நாட்களில் புகழ்பெற்ற கலைஞர்களின் நிகழ்ச்சிகள் இடம் பெறுகின்றன.
கிட்டதட்ட மறைந்தே போனதாகக் கருதப்படும் பொம்மலாட்டம் இங்கு உயிரோட்டத்துடன் நடத்தப்படுகிறது.

வட மாநிலங்களில் உள்ள கிராமிய பொருட்களை அங்குள்ள கலைஞர்களே நேரில் உருவாக்கி காட்டுவதுடன் நியாயமான விலைக்கும் கொடுக்கிறார்கள்.
குழுவாகவரும் பள்ளி குழந்தைகளுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகிறது. நாட்டுப்புறக் கலைகளை இங்கேயே தங்கியிருந்தும் கற்றுக்கொள்ளலாம். குழந்தைகளை குஷிப்படுத்த விளையாட்டு திடல், மாட்டுவண்டி சவாரி போன்றவைகளும் உண்டு.

சுத்தமான சுகாதாரமான சூழலில் சந்தோஷமாய் புத்துணர்வு பெற விரும்பும் கார்ப்ரெட் நிறுவனத்தைச் சேர்ந்தவர்களுக்கு இது ஒரு அற்புதமான இடமாகும். கண்ணைக்கட்டி பானையை உடைத்து, கயிறு இழுத்து என்று மிக வித்தியாசமாக கொண்டாடலாம்.
அதே போல தங்களது திருமணம், பிறந்த நாள் போன்ற நிகழ்வுகளை வித்தியாசமாக கொண்டாட விரும்புபவர்களுக்கும் இது ஒரு அருமையான இடம். குழுவாக வருபவர்களுக்கு சிறப்பு பயிற்சி வழங்கப்படுகிறது. குழந்தைகளுக்கு கோடைகால சிறப்பு பயிற்சி முகாம் உண்டு.

வாரத்தில் செவ்வாய் கிழமை விடுமுறை நாளாகும். மற்ற நாட்கள் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்து இருக்கும். உள்ளே நல்லதொரு உணவகமும் உள்ளது. பெரியவர்களுக்கு 75 ரூபாயும், சிறுவர்களுக்கு 20 ரூபாயும் (5 வயது முதல் 12 வயது வரை) அனுமதிக்கட்டணமாக வாங்கப்படுகிறது.
கூடுதல் விவரத்திற்கு நிர்வாக அதிகாரி சரத்நம்பியாரை (மொபைல் எண்:9841425149) தொடர்பு கொள்ளலாம். மேலும் 044-27472603; 044-27472783 போன்ற எண்களையும் தொடர்பு கொண்டு விசாரித்துக்கொள்ளலாம்.

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஆனந்தஜோதி - ராமநாதபுரம்தமிழ்நாடு,இந்தியா
22-மார்-201215:36:01 IST Report Abuse
ஆனந்தஜோதி மிகவும் நல்லதொரு முயற்சி,நமது கலாச்சாரத்தை நினைவூட்டும் நிகழ்வு ,மனமார வாழ்த்துகிறேன்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.