Real Story- Muttukaadu Boat House | சென்னை முட்டுக்காடு படகு இல்லத்தின் கதை- எல்.முருகராஜ்| Dinamalar

சென்னை முட்டுக்காடு படகு இல்லத்தின் கதை- எல்.முருகராஜ்

Added : மார் 31, 2012 | கருத்துகள் (2)
Advertisement

ஆழமற்ற நீர்பரப்பு

அபாயமற்ற படகுசசவாரி


வார இறுதியில் பலரின் களைப்பை நீக்கும் காயகல்பம்


இங்கே எண்ணற்ற படகுகள் தாலாட்டும், தென்றல் வந்து தலைதுவட்டும்


அதுதான் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள முட்டுக்காடு படகு இல்லம்.


சென்னையில் இருந்து மாமல்லபுரம் போகும் பாதையில் 30 வது கிலோமீட்டரில் அமைந்துள்ளது இந்த படகு இல்லம். தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் இந்த படகு இல்லத்தில் 28 மோட்டார் படகுகளும், 10 துடுப்பு படகுகளும், 9 பெடல் படகுகளும் இயங்குகின்றன


தங்கள் இணையுடன் தனிமையையும், இனிமையையும் விரும்புபவர்கள் என்றால் பெடல் படகுகளை எடுத்துக்கொண்டு பரந்த நீர்பரப்பில் மயக்கும் மஞ்சள்நிற மாலை வெயிலில் நனைந்தபடி, கரையோர மரங்களில் பூத்து குலுங்கும் மஞ்சள் கொன்றை மலர்களின் அழகை கண்களில் பருகியபடியும், பறக்கும் பறவை இனங்களை பார்த்து ரசித்தபடி குதூகலமாய் பயணிக்கலாம்.


துடுப்பு படகும், மோட்டார் படகும் சுற்றுலா வளர்ச்சிக்கழக ஒட்டுனர்களால் மட்டுமே ஒட்டப்படும். கடல் காற்றின் சுகத்தை முழுமையாக அனுபவித்தபடி அமைதியான படகு பயணத்தை விரும்புபவர்கள் துடுப்பு படகில் செல்லலாம். இந்த படகு இல்லத்தை பொறுத்தவரை மோட்டார் படகில் செல்வதுதான் விசேஷம். மனசும், உடலும் சோர்வடைந்தவர்கள், ஒரு முறை இந்த மோட்டார் படகில் பயணம் செய்தால் போதும் நிச்சயம் புத்துணர்ச்சி பெறுவர், அதற்கு நூறு சதவீதம் கியாரண்டி கொடுக்கலாம்.


இதற்கு முக்கியமான காரணம் உண்டு. நீங்கள் எங்கெங்கோ படகில் பயணம் செய்திருக்கலாம். ஆனால் இங்கே உள்ள மோட்டார் படகில் பயணம் செய்த அனுபவம் வேறு எங்கும் கிடைக்காது, இது அனுபவ உண்மை.


கடல் நீரில் படகை வளைத்து, வளைத்து ஒட்டும் போது ஏற்படும் திரில்லும், சில திருப்பத்தில் சிலீரென உடம்பில் பட்டுதெறிக்கும் தண்ணீரும், நீரைக்கிழித்து செல்லும் படகின் வேகமும், முகத்தில் அடிக்கும் குளிர்ந்த காற்றும் என இந்த மோட்டார் படகு தரும் பரவசம் தனிரகம்.


படகு இல்லத்தின் முதுநிலை மேலாளர் இமயவர்மனின் மேற்பார்வையில் பயணிகளை பரிவுடனும்,பாசசத்துடனும் நடத்தும் ஊழியர்கள் இந்த படகு இல்லத்தின் கூடுதல் அம்சம்.


வருடத்தின் அனைத்து நாட்களும் இந்த படகு இல்லம் திறந்து இருக்கும். காலை 9 மணியில் இருந்து மாலை 6 மணிவரை இடைவேளை இன்றி இயங்கும். படகு கட்டணம் படகுகளுக்கேற்ப வேறுபடும், உத்தேசமாக ஒருவருக்கு 50 ரூபாயில் இருந்து 65 ரூபாய் வரை செலவாகும். குழுவாக வரும் மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு சலுகை கட்டணம் உண்டு. படகில் பயணம் செய்யாதவர்கள் வேடிக்கை பார்க்கவும், ஓய்வு எடுக்கவும் நிறைய இடம் உண்டு. நல்ல உணவகமும் உண்டு.


மேலும் விவரத்திற்கு தொடர்புகொள்ளவேண்டிய எண்:044-27472369.


Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
govar - coimbatore,இந்தியா
06-ஏப்-201211:54:00 IST Report Abuse
govar குட் information
Rate this:
Share this comment
Cancel
இளையராஜா - ஆக்லாந்து,நியூ சிலாந்து
06-ஏப்-201202:12:16 IST Report Abuse
இளையராஜா இது ரொம்ப நல்ல விஷயம். மக்கள் இதை பயன்படுத்தி கொள்ள வேண்டும். தினமலருக்கு மற்றும் முருகராஜ் அவர்களுக்கு நன்றி.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை