Real Story- Chennai Riding School | சென்னை ரைடிங் ஸ்கூலின் கதை- எல்.முருகராஜ்| Dinamalar

சென்னை ரைடிங் ஸ்கூலின் கதை- எல்.முருகராஜ்

Added : ஏப் 07, 2012
Advertisement

கம்பீரத்திற்கு இன்னொரு பெயர் ஒன்று உண்டு என்றால் அது குதிரை என்றே சொல்லலாம். கி.மு.4000ம் ஆண்டிலேயே மனிதனால் பழக்கப்பட்ட விலங்குதான் குதிரை. ஆதிகாலம் தொட்டு மனிதனுக்கு பலவகையிலும் உதவியாக இருந்துவருவதே குதிரை. ராஜாக்கள் காலத்தில் குதிரைப்படை என்பது முக்கியமான ஒன்றாக இருந்தது


புரவி என்றும் பரி என்றும் பல இலக்கியங்களில் சொல்லப்பட்ட குதிரை இப்போதும் கூட பந்தய மைதானங்களில் ஒடுவதை பார்க்கும் போது அதன் வேகமும், தீரமும் மனதிற்குள் ஒருவித பிரமிப்பை ஏற்படுத்தும். இன்றைக்கும் ராணுவத்தில் வீரர்களின் பல்வேறு சாகசச செயலுக்கு குதிரையே பயன்படுத்தப்படுகிறது.


அப்படிப்பட்ட குதிரையில் நீங்களும் முறைப்படி சவாரி செய்யலாம், உட்கார்ந்தபடி தடைகளை தாண்டலாம், போலோ விளையாட்டு விளையாடலாம்.


அதற்கு வழிகாட்டி உதவுவதுதான் சென்னை ரைடிங் ஸ்கூல்


சென்னை வேளாச்சேரியில் கடந்த 1951ம் ஆண்டு துவக்கப்பட்ட இந்த குதிரை ஓட்டப்பயிற்சி பள்ளியில் இன்றைய தேதிக்கு 24 குதிரைகள் உள்ளன. இரண்டு ஏக்கர் நில பரப்பளவில் குதிரையை ஒட்ட பயிற்சி வழங்கப்படுகிறது. தடைதாண்டி ஒட்டுவதற்கு தனி மைதானம் உள்ளது.


இந்த பயிற்சி பள்ளியின் தலைவர் என்.வி.ரவி அதிகாலை 4 மணிக்கு எழுந்து மைதானத்திற்கு சீருடையுடன் வந்துவிடுகிறார். இங்கு வரக்கூடிய பழைய, புதிய உறுப்பினர்களுக்கு களத்திலும், வெயிலிலும் நின்றபடி பயிற்சி அளிக்கிறார். இவருக்கு உதவியாக பெங்களூரில் வந்துள்ள அனிதா ஒஜோ என்ற பெண் பயிற்சியாளர் செயல்படுகிறார்.


இவர்கள் கூறுகையில் குதிரை ஒட்டுவது என்பது அருமையான, இனிமையான விளையாட்டாகும். இது உடம்பை "பிட்டாக' வைத்துக்கொள்ள உதவும். கூச்ச சுபாவம் உள்ளவர்கள் இந்த பயிற்சிக்கு பின் மனதைரியம் பெறுவார்கள். உடல் கூனி நடப்பவர்கள் நிமிர்ந்து நடப்பார்கள். இந்த ஒரு விளையாட்டில்தான் ஆண், பெண் பேதமில்லாமல் சமமாக பங்கேற்கலாம். 6 வயதில் இருந்து 60 வயதுவரை யாவரும் பங்கேற்கலாம்.


இங்கு பயிற்சி பெறுபவர்கள் மாநிலம் மற்றும் தேசிய அளவில் நடைபெறும் பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு பரிசுகள் பெற்றுவருகிறார்கள். குழந்தைகள் பயிற்சி பெற போனி என்ற குட்டிக்குதிரைகளும் உண்டு.


திங்கள் கிழமை வாரவிடுமுறை. மற்ற நாட்களில் காலை மற்றும் மாலை வேளைகளில் பயிற்சி வழங்கப்படும். பயிற்சி கட்டணம் பயிற்சியைப் பொறுத்து பல்வேறு விதமாக உள்ளது. போனில் விசாரித்துக்கொள்ளவும். போன் எண்:044-28362481.


Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை