விவாகரத்து உத்தரவை ரத்து செய்யக் கோரி நடிகை சுகன்யா கணவர் மேல்முறையீடு| Dinamalar

விவாகரத்து உத்தரவை ரத்து செய்யக் கோரி நடிகை சுகன்யா கணவர் மேல்முறையீடு

Added : ஜூலை 21, 2010 | கருத்துகள் (4)
விவாகரத்து உத்தரவை ரத்து செய்யக் கோரி நடிகை சுகன்யா கணவர் மேல்முறையீடு

புதுடில்லி : நடிகை சுகன்யாவுக்கு வழங்கப்பட்ட விவாகரத்தை ரத்து செய்ய வேண்டும், அல்லது கோர்ட் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என, நடிகை சுகன்யாவின் கணவர், சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளார்.


தமிழ் சினிமா நடிகை சுகன்யாவுக்கும், அமெரிக்க குடியுரிமை பெற்றுள்ள ஸ்ரீதரன் என்பவருக்கும் கடந்த 2002, ஏப்ரல் 17ம் தேதி அமெரிக்காவின் நியூஜெர்சியில் உள்ள பாலாஜி கோவிலில், இந்து சம்பிரதாயப்படி திருமணம் நடந்தது. கடந்த 2003, ஜனவரியில் இந்தியா திரும்பிய சுகன்யா, நிரந்தரமாக இங்கு தங்கிவிட்டார். பின், கடந்த 2004ல் விவாகரத்து கோரி, சென்னை குடும்ப நல கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். கோர்ட்டில் ஸ்ரீதரன் ஆஜராகாததால்,வழக்கு சுகன்யாவுக்கு சாதகமானது. சென்னை ஐகோர்ட்டும் இதை உறுதிபடுத்தியது. இந்த தீர்ப்பை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில், ஸ்ரீதரன் மேல் முறையீடு செய்துள்ளார்.


அந்த மனுவில் கூறியிருப்பதாவது: நான் அமெரிக்காவில் வசித்து வருவதால், என் மீது இங்கு வழக்கு தாக்கல் செய்ய முடியாது;எங்களது திருமணமும் அமெரிக்காவில் தான் நடந்து, பதிவு செய்யப்பட்டது. இந்து திருமணச் சட்டம் இந்த வழக்கை பொறுத்த வரை பொருந்தாது. நானும், இந்தியாவில் வசிக்கும் பட்சத்தில் வேண்டுமானால் இந்த சட்டம் பொருந்தும். எனவே, இந்த விவாகரத்தை ரத்து செய்ய வேண்டும் அல்லது இடைக்காலத் தடை விதிக்க வேண்டும். இவ்வாறு சுப்ரீம் கோர்ட்டில், ஸ்ரீதரன் மேல்முறையீடு செய்துள்ளார்.


Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X