Real Story- Titanic Tragedy | டைடானிக் சோகத்திற்கு வயது 100- எல்.முருகராஜ்| Dinamalar
பதிவு செய்த நாள் :
கருத்துகள் (6)  கருத்தை பதிவு செய்ய
எழுத்தின் அளவு:

ஒரே இரவில், 1,523 பேர் கடலில் மூழ்கி இறந்த சோக வரலாற்றை சொந்தமாகக் கொண்ட டைடானிக் சொகுசு கப்பல் முழ்கி இன்றோடு (ஏப்-15) நூறு வருடமாகிறது.ஆனாலும் அந்த நினைவுகள் மூழ்கிவிடாமல் அனைவரது மனதிலும் நிழாலாடிக்கொண்டுதான் இருக்கிறது.
இந்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு, எண்ணற்ற நாவல்களும், திரைப்படங்களும் வெளிவந்திருந்தாலும், ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் லியார்னாடே டிகாப்ரியோ, கேட் வின்ஸ்லெட் நடிப்பில், கடந்த 1997ல், உருவாக்கப்பட்டு வெளிவந்த டைடானிக் திரைப்படம், எல்லார் மனதிலும் மறக்க முடியாத சோகத்தை பதித்துள்ளது என்னவோ நிஜம்.
பல நூறு பக்கங்களில் சொல்ல முடியாத சோகத்தை, அந்த படம் நேர்த்தியாகவும், கூடுமானவரையில் நிஜமாகவும் சொன்னதன் விளைவே, 11 ஆஸ்கர் விருதுகள் பெற்று, உலகம் முழுவதும் வெற்றிகரமாக ஓடியது.அந்த படத்தில் சொல்லப்பட்ட காதல் கதை மட்டும் கற்பனையே தவிர, மற்ற அனைத்தும் சம்பவத்தின் அடிப்படையிலேயே எடுக்கப்பட்டதால், இன்றளவும் டைடானிக் தொடர்புடைய சம்பவங்கள் என்றால், மக்களிடம் ஒரு ஆர்வம் இருக்கத்தான் செய்கிறது.
டைடானிக் கப்பல், பயணிகளுக்கான சொகுசு கப்பலாக திட்டமிட்டு, பார்த்து பார்த்து உருவாக்கப்பட்டது. அயர்லாந்து நாட்டின்

பெல்பாஸ்ட் நகரில் கட்டப்பட்டதாகும். நீச்சல் குளம், உடற்பயிற்சி கூடம், பல்துறை அரங்குகள் என, ஒன்பது அடுக்குகளுடன் உருவாக்கப்பட்ட இந்த கப்பலின் நீளம், 882 அடி, உயரம் 175 அடி, எடை 46 ஆயிரத்து 328 டன்.மார்ச் 31, 1909ல், கட்டத் துவங்கி, மே 31, 1911ல், நிறைவடைந்தது. 3,000 ஆட்கள் கட்டுமானப் பணியில் ஈடுபட்டனர்.
பின்னர், கப்பலின் பயண தேதி அறிவிக்கப்பட்டது. பலரும் ஆர்வமாக பயணச் சீட்டை பெற்றனர். அப்போதே அனுமதி கட்டணம், 4,350 டாலர். இன்றைய மதிப்பிற்கு, 80 ஆயிரம் டாலர். தன் முதல் பயணமே, முடிவான பயணம் என்று அறியாத டைடானிக் கப்பல், 1,343பயணிகள் மற்றும் 885 கப்பல் சிப்பந்திகளுடன் மகிழ்ச்சியாக புறப்பட்டது.அயர்லாந்தில் இருந்து கிளம்பி, பிரான்ஸ் வழியாக நியூயார்க் போகும் பயண ஏற்பாட்டின்படி கப்பல், 1912ல் ஏப்., 10ம் தேதி கிளம்பியது. கடல் அலைகளை மிஞ்சும், பயணிகளின் ஆர்ப்பரிக்கும் ஆனந்த அலைகளுடன் பயணித்த கப்பல், ஐந்து நாட்கள் கழித்து அதாவது, 15ம் தேதி இரவு, 220 அடி நீள பனிப் பாறையில் மோதி, மூழ்க தொடங்கியது. இரவு 11.40 மணிக்கு மூழ்க துவங்கிய கப்பல் பின்னிரவு, 2.20 மணிக்கு முழுமையாக மூழ்கியது. முழுவதுமாக மூழ்கும் போது, கப்பல் இரண்டாக பிளந்தது இன்னுமொரு சோகம்.இந்த இடைப்பட்ட நேரத்தில், கப்பலில் இருந்த உயிர்காக்கும்

Advertisement

படகுகளின் மூலம் பெண்கள், குழந்தைகள் என, 705 பேர் மட்டும் காப்பாற்றப் பட்டனர். கப்பல் சிப்பந்திகள் உட்பட, 1,523 பேர் கடலில் மூழ்கி இறந்தனர். மூழ்கியவர்களில், 300 பேரின் உடல் மட்டும் மீட்கப்பட்டது.இந்த கொடுமையான சம்பவம் நடந்து, 74 வருடங்களுக்கு பிறகு, 12ஆயிரத்து 600 அடி ஆழத்தில் சிக்கியிருந்த கப்பலின் என்ஜினின் ஒரு பகுதி மீட்கப்பட்டது. அதன் பின், டைடானிக் பற்றிஏற்பட்ட ஆர்வம்தான் சிறிதும் பெரிதுமான, 14 படங்களும், நூற்றுக்கும் அதிகமான புத்தகங்களும் வெளிவந்தன.
இந்த சோக சுவட்டின் நூற்றாண்டை முன்னிட்டு, டைடானிக் படம், முப்பரிமாண (3டி) திரைப்படமாக உருவாக்கப்பட்டு, திரையிடப்பட்டுள்ளது. தன் காதலி உயிர் பிழைக்க வேண்டும் என்பதற்காக விடிய, விடிய எலும்பையும் ஊடுருவி உருக்கும், ஐஸ் தண்ணீரில் இருந்தபடி, காதலுக்காக உருகி, உருகியே உயிரைவிடும் காதலன் , தன் காதலியின் விரலில் இருந்து விடுபட்டு கொஞ்சம், கொஞ்சமாக காதலி கண் முன்னே, கடலின் ஆழத்தில் மெதுவாய், மிக மெதுவாய் அமிழ்ந்து இறந்து போகும் அந்த காட்சிக்கு, முப்பரிமாண தொழில்நுட்பம் ரசிகர்களிடம் இருந்து மேலும் கொஞ்சம் அழுகையை வெளிக்கொணரப் போவது மட்டும் நிச்சயம்.
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (6)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Edward Victor - Sanaa,ஏமன்
15-மே-201216:14:37 IST Report Abuse
Edward Victor 705 நபர்கள் தப்பித்தது உண்மையா? அதை முழ்காத கப்பல் என்று கூறியவர்கள் ஆழ்த்த சோகத்தில் மூழ்கினர். என்பது உண்மை..அதில் பயணித்த அணைவரும மிக பெரிய செல்வந்தர்கள். என்னினும் அனுதாபம் வருகிறது .
Rate this:
Share this comment
Cancel
Arun P - Mangalore,இந்தியா
02-மே-201213:59:39 IST Report Abuse
Arun P ஒரு நல்ல காதல் கதை சார். மறக்க முடியாத படம்
Rate this:
Share this comment
Cancel
bala - madurai,இந்தியா
28-ஏப்-201215:07:39 IST Report Abuse
bala படம் நன்றாக இருந்தது
Rate this:
Share this comment
Cancel
Sebastian - chennai.,இந்தியா
18-ஏப்-201214:39:03 IST Report Abuse
Sebastian படிக்கும் போதே அழுகை வருது ....
Rate this:
Share this comment
Cancel
PRINCY HONEY - Trichy,இந்தியா
18-ஏப்-201213:22:57 IST Report Abuse
PRINCY HONEY மிகவும் வருத்தமான விஷயம். ஆடம்பரத்திற்கு ஆசைப்பட்டு உயிரை இழந்தவர்களுக்கு என் அனுதாபங்கள். அதை உயிரோட்டம் உள்ள படமாக எடுத்த இயக்குனருக்கு எனது பாராட்டுகள்.
Rate this:
Share this comment
Cancel
rajesh - covai  ( Posted via: Dinamalar Android App )
16-ஏப்-201218:59:58 IST Report Abuse
rajesh சூப்பர்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.