மனநலம் குன்றியவர்களுக்கு ஆதரவு : களப்பணியில் "சாந்திவனம்' சாதிப்பு| Dinamalar

தமிழ்நாடு

மனநலம் குன்றியவர்களுக்கு ஆதரவு : களப்பணியில் "சாந்திவனம்' சாதிப்பு

Added : ஜூலை 22, 2010
Advertisement

கரூர்: "மனநலம் குன்றியோருக்கு தேவை ஆதரவே; அனுதாபம் அல்ல' என்ற நோக்கில், கரூர் மாவட்டம் தோகமலை அருகே புழுதேரியில் மனநல காப்பகம் ஒன்று இயங்குகிறது.


கன்னியாகுமரி - காஷ்மீர் தேசிய நெடுஞ்சாலை, கரூர் வழியாக செல்கிறது. வடமாநிலங்களை சேர்ந்த பல வாகனம் கரூரை கடந்து செல்வதால், பல இடங்களை சேர்ந்த மனநிலை பாதிக்கப்பட்டவர்கள், லாரியில் இங்கு இறக்கிவிடப்படுகின்றனர். லாரி டிரைவர்களுக்கு கணிசமான தொகை கிடைப்பதால், இந்த நிகழ்வு தொடர்கிறது. இதனால், கரூர் சாலைகளில் மனநிலை தவறியவர்களை காண்பது வாடிக்கையாவிட்டது. நெருங்கவே அச்சப்படும் வகையில் ஆக்ரோஷமாகவும், அருவருப்பாகவும் உள்ள இவர்களை மனிதாபிமானத்துடன் கவனிக்கும் பொறுப்பை, புழுதேரி "சாந்திவனம்' அமைப்பினர் ஏற்றுள்ளனர். சாலையில் திரியும் மனநிலை பாதித்தவர்களுக்கு அடைக்கலம், சிகிச்சை மற்றும் மறுவாழ்வு அளிப்பதுடன், பலரை அவர்களுடைய உறவினர்களிடமே சேர்க்கும் கடமையையும் சாந்திவனத்தினர் செய்கின்றனர்.


"சாந்திவனம்' அமைப்பாளர் டாக்டர் ராமகிருஷ்ணன் கூறியதாவது: மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும்போது, மறுவாழ்வு ஏற்படுத்த அமைப்பு துவங்கினோம். இந்நிலையில், ஏர்வாடியில் மனநிலை பாதிக்கப்பட்டோர் பாதிக்கப்பட்டது அறிந்து, காப்பகம் அமைக்க தீர்மானித்தேன். டாக்டர் கலையரசன் மற்றும் நண்பர்கள் உதவியுடன், தோகமலை அருகே புழுதேரியில் ஐந்து ஏக்கர் பரப்பளவில் காப்பகம் அமைத்தோம். இதுவரை 200க்கு மேற்பட்டோர் சிகிச்சை அளிக்கப்பட்டனர். ஐந்துக்கு மேற்பட்ட டாக்டர்கள் சிகிச்சை அளிக்க காப்பகம் வருகின்றனர். இதுமட்டுமல்லாது "சாந்திவனம்' பரிந்துரைக்கும் நபருக்கு, திருச்சியில் உள்ள டாக்டர்கள் கட்டணமின்றி சிகிச்சை அளிக்கின்றனர். கரூரில் பொறுப்பில் இருந்த அனைத்து கலெக்டர்களும் முழு ஆதரவு அளித்துள்ளனர். கரூர் அரசு மருத்துவமனையில் இருந்து மருந்து கிடைக்க உதவியுள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன், சாந்திவனத்தில் இறந்த நோயாளி ஒருவருக்கு, ஜாதியின் பெயரால் தகனம் செய்ய இடமளிக்காமல் பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையறிந்த அப்போதைய கலெக்டர் வெங்கடேஷ், உடனடியாக நடவடிக்கை எடுத்ததுடன், சாந்திவனம் அருகில் மயானத்துக்கு அரை ஏக்கர் நிலமும் அளிக்க உத்தரவிட்டார். அரசு தரப்பில் எந்த உதவியும் இல்லாமல், மக்கள் நன்கொடை மூலமாக சாந்திவனம் நடத்தப்படுகிறது. மத்திய அரசின் உதவி கோரி, சமூகநலத்துறை மத்திய இணை அமைச்சர் நெப்போலியனிடமும் கோரிக்கை அளித்தோம். இவ்வாறு அவர் கூறினார்.


Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X