Real Story- Home for Disabled | மாற்றுத் திறனாளி பெண்களின் தாயகம் தியாகம்; தாய் அமுதசாந்தி| Dinamalar

மாற்றுத் திறனாளி பெண்களின் தாயகம் தியாகம்; தாய் அமுதசாந்தி

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

அமுதசசாந்தி; பிறக்கும்போதே இடது கை இல்லாமல் பிறந்தவர்;ஆனால் சாதிக்க வேண்டும் என்ற வேகத்தோடு வளர்ந்தவர். ஆஸ்ரம வாழ்க்கை இவரது உள்ளத்தில் தொண்டை விதைத்து விருட்சமாக வளர்த்தது.இதன் காரணமாக முதுகலை படிப்பை முடித்ததும் கிடைத்த வேøøயை விட்டுவிட்டு ,கிராமப்புற மாற்றுத் திறனாளி பெண்களுக்கு சேவை செய்வதற்காகவே மதுரையில் கடந்த 2005-ம் ஆண்டு தியாகம் பெண்கள் அறக்கட்டளையை துவக்கினார்.
வீட்டைவிட்டு வெளியே வரமுடியாத சூழல், உடல் தகுதியின்மை, பொருளாதார வசதியின்மை, கல்வியறிவின்மை, சமூக சூழல் ஆகியவற்றைக் காரணம் காட்டி தங்களைத் தாங்களே முடக்கி கொள்ளும் மாற்றுத் திறனாளி பெண்கள், உழைப்பதற்கு துணிந்து கூலியை பெறத் தொடங்கும்போதுதான் அவர்களுக்கான மரியாதை இங்கு சாத்தியம் என்பதை உணர்ந்தார். வீட்டைவிட்டு வெளியே வராத வரை மாற்றுத்திறனுடையோர் வாழ்வில், எந்தவொரு மாற்றமும் நிகழப்போவதில்லை என்பதை அவர்களுக்கும், அவர்களைச் சார்ந்தவர்களுக்கும் உணர்த்தினார்.


இதன் காரணமாக கிராமங்களில் முடங்கிக்கிடந்த மாற்றுத்திறனாளி பெண்களுக்குள் உற்சாகத்தையும், நம்மால் முடியும் என்ற நம்பிக்கையையும் ஏற்படுத்தியவர். அவர்கள் மதுரை நகர் பகுதியில் வந்து இலவசமாக தங்குவதற்கு ஒரு இல்லத்தை ஏற்பாடு செய்தார். பின்னர் அவர்களின் விருப்பம், கல்வி, திறமை அடிப்படையில் தையல் முதல் கம்ப்யூட்டர் போன்றவை வரை கற்றுத்தர ஏற்பாடு செய்தார்.தொடர்ந்து மாலைநேரக் கல்வி மையம், சுய உதவிக்குழு, நட்பு வட்டம், கலைக்குழு, ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல் மையம் ஆகிய எட்டு பிரிவுகள் துவங்கப்பட்டு இன்றைய தேதிக்கு மதுரை மற்றும் மதுரையைச் சுற்றியுள்ள 42 கிராமங்களில் உள்ள ஆயிரத்திற்கும் அதிகமான மாற்றுத் திறனாளி சகோதரிகள் பலன் பெற்று வருகின்றனர்.


தாங்கள் கற்றுக்கொண்ட பயிற்சிகளால் அதனை தொழிலாக மட்டுமில்லாமல் வாழ்வாகவே மாற்றிக்கொண்டனர். இதனால் பாரமாக இருப்பார்கள் என்று நினைத்த அந்த பெண் பிள்ளைகள்தான், தற்போது மதுரையைச் சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள பெற்றோர்களுக்கு ஆயிரமாயிரமாய் சம்பாதித்து கொடுத்து, குடும்பத்தை தாங்கி பிடித்து வருகின்றனர். பெற்றோர் ஆனந்த கண்ணீர் வடிக்கின்றனர்.

தியாகம் அறக்கட்டளையில் உருவாக்கப்படும் "நைட்டி' போன்ற உடைகள் தரத்தாலும், நியாயமான விலையாலும் மிகவும் பிரசித்தம் பெற்றுள்ளது. அந்த ஆடைகளை கிராமங்களை விட்டு வரவே முடியாத சூழலில் உள்ள மாற்றுத்திறனாளி பெண்களிடம் கொடுத்து விற்பனை செய்து லாபம் தருகிறார்கள். இதன் காரணமாக லாபம் மட்டுமின்றி சிறுதொழில் முனைவர்களாகவே பலர் அடையாளத்தையும், பெருமையையும் பெற்றுள்ளனர்.
கிராமங்களில் உள்ள மாற்றுத்திறனாளி பெண்களே உங்கள் பலம் உங்களுக்கு தெரியாது. உங்களால் முடியாதது எதுவுமில்லை, உங்களது ஒரே ஓரு முயற்சி என்பது தியாகம் பெண்கள் அறக்கட்டளையுடன் தொடர்பு என்பதாக மட்டும் இருக்கட்டும் அதன் பிறகு உங்கள் வாழ்க்கையில் கவலைக்கும்,வேதனைக்கும் வேலையில்லை என்று சொல்லும் அமுதசாந்தியின் முழக்கமே துளிர்த்த தீரும் நம்பிக்கையின் விதை என்பதுதான்.


தொடர்புக்கு 93452 13417,0452-2602195.

-எல்.முருகராஜ்

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஆசை கார்த்திக் - சென்னை,இந்தியா
24-ஏப்-201223:39:02 IST Report Abuse
ஆசை கார்த்திக் Hats off Madam ! Congrats !
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.