Deer population increased | அதிகரித்த ஐவகை ரகமான்கள் கணக்கெடுப்பில் புது தகவல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அதிகரித்த ஐவகை ரகமான்கள் கணக்கெடுப்பில் புது தகவல்

Added : ஏப் 24, 2012

ஈரோடு: ஈரோடு மண்டல வனப்பகுதியில் நடந்த கணக்கெடுப்பில், ஈரோடு மாவட்டத்தில் ஐவகை மான்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக வனத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கிறது. இந்தியாவில் உள்ள வனப்பகுதியில் சருகு மான், புள்ளி மான், குரைக்கும் மான், நான்கு கொம்பு மான், ஆண்டி லோப் மான், சாம்பார் மான் உள்ளிட்ட, 200க்கும் மேற்பட்ட மான் இனங்கள் வசிக்கின்றன. இவற்றில், தமிழகத்தில் உள்ள வனப்பகுதியில், 80க்கும் மேற்பட்ட மான் இனங்கள் வசிக்கின்றன. நெல்லை, மதுரை, நாகப்பட்டினம், ஊட்டி உள்ளிட்ட பல்வேறு வனங்களில் குறிப்பிட்ட வகை கொண்ட மான் இனங்கள் வசிக்கின்றன. ஆனால், ஈரோடு மாவட்டத்தில் சருகு மான், புள்ளி மான், சாம்பார் மான், குரைக்கும் மான், எலி மான், கட மான் ஆகிய ஐவகை மான் இனங்கள் ஒரு சேர வசிக்கின்றன. இது, ஈரோடு மாவட்டத்துக்கு கிடைத்த வரப்பிரசாதமாக வனத்துறையினர் கருதுகின்றனர்.

ஈரோடு மண்டல வனப்பாதுகாவலர் அருண் கூறியதாவது: ஈரோடு மாவட்டத்தில், ஈரோடு டிவிஷனில் பர்கூர், காங்கேயம், அந்தியூர், எப்.எஸ்., பெருந்துறை, சென்னம்பட்டியும், சத்தியமங்கலம் டிவிஷனில் பவானிசாகர், ஹாசனூர், தாளவாடி, டி.என்.பாளையம் ஆகிய பகுதியிலும் காப்புக்காடுகள் உள்ளன. நம் மாவட்ட வனப்பகுதியில் புலி, மான், மயில், மலை அணில், குரங்கு, நரி உள்ளிட்ட பல வகையான விலங்குகளும், பறவைகளும் வசிக்கின்றன. இதில், தற்போதைய கணக்கெடுப்பில் புலி, யானை, மான்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளதாக தெரிகிறது.
ஈரோடு மாவட்ட வனப்பகுதியின் வரப்பிரசாதமாக கருதப்படும், சருகு மான், புள்ளி மான், சாம்பார் மான், குரைக்கும் மான், எலி மான்,கட மான் ஆகிய மான்களின் எண்ணிக்கையும் அதிகளவில் உயர்ந்துள்ளன. விரைவில், ஈரோடு மண்டல வனப்பகுதியில் உள்ள வன விலங்குகளின் எண்ணிக்கை குறித்த விவரம் வெளியிடப்படும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X