Kalvimalar | கேள்வி பதில் | Dinamalar

கேள்வி பதில்

Updated : மே 03, 2012 | Added : மே 03, 2012 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

எனது பெயர் ரமா. நான் இறுதியாண்டு EEE படிக்கிறேன். எலக்ட்ரிக்கல் அல்லது எலக்ட்ரானிக்ஸ் பொறியாளராக பணிபுரிய எனக்கு விருப்பம். இதுபோன்ற துறைகள் பெண்களுக்கு எந்தளவில் ஒத்துப்போகும் என்று எனக்கு கூறுங்கள்?
குறிப்பிட்ட துறைகள்தான் என்றில்லாமல், சவால்கள் எல்லாவற்றிலும் உள்ளன. நிறுவனங்கள், பொதுவாக பெண்களைப் பணிக்கு எடுக்க விரும்புவதில்லை என்ற ஒரு தவறான கருத்து நிலவுகிறது. அந்த நிலை கடந்த 60களில் மற்றும் 70களில் இருந்திருக்கலாம். ஆனால் இன்றோ நிலைமை வேறு. ஒருவரின் பாலினம் என்ன என்பதற்கு நிறுவனங்கள் பெரியளவில் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. தொழில்நுட்ப பணிகளில் பெண் களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நடவடிக்கையை பல நிறுவனங்கள் மேற்கொண்டுள்ளன.
Heavy Industries போன்றவையே, ஒரு குறிப்பிட்ட பணியை, பல கடினமான சூழல்களையும் கடந்து ஒரு பணியாளரால் செய்ய முடியுமா? என்பதை மட்டுமே பார்க்கின்றன, பாலின வேறுபாட்டை அல்ல. அந்த வகையில், எலக்ட்ரானிக்ஸ் துறை ஒரு விஷயமே அல்ல. நீங்கள் தாராளமாக முன்னேறலாம்.
எனது பெயர் கிருஷ்ணன். எனது மகன் அடுத்த வருடம் AIEEE தேர்வை எழுதவுள்ளான். அவன், மெக்கானிக்கல் இன்ஜினியரிங்கில் நிபுணத்துவம் பெற விரும்புகிறான். உண்மையில் அது சரியான முடிவா? என்று எனக்குத் தெரியவில்லை. உங்களது ஆலோசனையைக் கூறுங்களேன்.
பொறியியல் படிக்க விரும்பும் பலருக்கு, என்ன துறையைத் தேர்ந்தெடுப்பது என்ற குழப்பம் பெரியளவில் இருக்கும். இன்ன துறையைத்தான் படிக்க வேண்டும் என்ற தெளிவான முடிவு உங்கள் மகனுக்கு இல்லையென்றால், படிக்கும் கல்லூரிக்கு முக்கியத்துவம் கொடுக்கவும். ஐ.டி., மற்றும் கணிப்பொறி அறிவியல் போன்ற துறைகள் அதிகளவிலான பொறியியல் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பை அளிக்கின்றன.
துறையை விட கல்லூரியே முக்கியம். ஏனெனில், நல்ல கல்லூரியில்தான் பல நல்ல நிறுவனங்கள் வந்து மாணவர்களை எடுத்துக் கொள்ளும். கேம்பஸ் இன்டர்வியூ இல்லாத பல கல்லூரிகளில், தாங்கள் விரும்பிய படிப்பை, ஏராளமாக செலவழித்துப் படித்த பல மாணவர்கள், வேலை பெற போராடி வருவதையும் பார்க்க முடிகிறது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Manian - Chennai,இந்தியா
17-ஜூன்-201303:19:48 IST Report Abuse
Manian பழநியில் அனுமதி பெற்ற கைடு இல்லை என்ற செய்தியை கண்டு வருத்தமாக இருக்கிறது. சரித்திரதில் பட்டம் பெற்று வேலை இல்லாதவர்களை இம்மாதிரி கைடுகளாக மாற்றலாமே. வெறும் செய்திகள் வெளிட்டால் போதாது. இது போன்ற வழிகளையும் கல்லூரிகளில் சொல்லித்தர வேண்டும். நல்ல வருமானம், நல்ல வாழ்க்கை அமைய எல்லா சரித்திர பெயர் பெற்ற ஊர்களிலும் இதை செய்யலாமே.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X