Kalvimalar | வித்தியாசமான வெளிநாட்டு படிப்புகள்| Dinamalar

வித்தியாசமான வெளிநாட்டு படிப்புகள்

Added : மே 03, 2012
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
Advertisement
வித்தியாசமான வெளிநாட்டு படிப்புகள்

வெளிநாட்டில் படிக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கு உள்ளது. உயர்கல்விக்காக வெளிநாடு செல்லும் இந்திய மாணவர்கள் தேர்ந்தெடுக்கும் துறை பெரும்பாலும் பொறியியல், தொழில் நுட்பம் மற்றும் மேலாண்மை சார்ந்த படிப்புகளாகவே உள்ளன. ஆனால், அவற்றைத் தாண்டி, சாகசம், அழகியல், சுற்றுச்சூழல், விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு தொடர்பான படிப்புகளும் உண்டு. அவைகளுக்கு உள்நாட்டிலும் மவுசு உண்டு.
வெளிநாடு செல்லுதல்: மேற்கூறிய வித்தியாசமான படிப்புகளை படிக்க, ஒருவர் இந்தியாவை விட, ஏன் வெளிநாடு சென்று படிக்க விரும்புகிறார் என்ற கேள்வி எழலாம். அதற்கு காரணமும் உண்டு. இந்தியாவைப் பொறுத்தவரை, மேற்படிப்பு என்றாலே, பொறியியல், மருத்துவம், சட்டம் மற்றும் மேலாண்மை என்ற சில நிலைகளுக்குள் தான் ஊக்கம் அளிக்கப்படுகிறது.
பள்ளி படிப்பின் போதே இந்த அறிவுரைகள் தொடங்கி விடுகின்றன. வழக்கமான துறை மற்றும் படிப்புகளைத் தாண்டி பல விஷயங்கள் இருக்கின்றன என்பதை இந்திய சமூகம் இன்னும் உணரவில்லை. இந்நிலையில்தான் வெளிநாட்டு கல்வி முக்கியத் துவம் பெறுகிறது. முன்னேறிய நாடுகளில் நிலைமையே வேறு. அவர்களுக்கு உலகம் பெரிது.
விளையாட்டு மற்றும் சாகச படிப்புகள்: சாகசம், விளையாட்டு, திறன் வெளிப்பாடு மற்றும் பொழுதுபோக்கு என்ற அளவில் அங்கு பல வித்தியாசமான படிப்புகளை மேற்கொள்வதற்கான களம் பெரிது. இதுபோன்ற பாரம்பரிய படிப்புகளிலிருந்து வேறுபட்ட, தங்களுக்கு உண்மையில் விருப்பம் உள்ள துறையில் தங்களது
கல்வித் தகுதியை உயர்த்திக் கொள்ள விரும்பும் மாணவர்களுக்கு வெளிநாட்டு கல்வி நிறுவனங்கள் உகந்ததாக அமையலாம்.
அவ்வாறு மாணவர்கள் வெளிநாடு சென்று நடனம், மலையேறுதல், படகோட்டுதல், சாகச சுற்றுலா உள்ளிட்ட பலவித படிப்புகளை மேற்கொள்ள முடியும்.
மேலும், இந்தியா திரும்பி, இதுதொடர்பான பள்ளிகளை தொடங்கும் ஆர்வத்தையும், ஊக்கத்தையும் பெறுகின்றனர். வெளிநாட்டில் அவர்கள் பெறும் வித்தியாசமான அனுபவங்கள் அவர்களின் உலகை விரியச் செய்கிறது.
வெளிநாட்டினர், தங்களின் பொழுதுபோக்காக மேற்கொள்ளும் பல நடவடிக்கைகளை இணையம் மூலமாக அறியும் இந்திய இளம் தலைமுறை யினர், அவைகளின் மீது ஆர்வம் கொள்கின்றனர். மேலே குறிப்பிட்டது போன்ற சாகசம் மற்றும் பொழுதுபோக்கு துறைகளை பல முன்னேறிய நாட்டு கல்வி நிறுவனங்கள் வழங்குகின்றன.
கனடாவின் ப்ரேசர் வேலி பல்கலைக்கழகம் சாகச சுற்றுலா படிப்புகளை வைத்துள்ள கல்வி நிறுவனங்களில் முக்கியமானது. மேலும், ஆஸ்திரேலியாவிலும், விளையாட்டு தொடர்பான பல இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகள் உள்ளன.

Exercise Rehabilitation science, Exercise physiology, Sports psychology அல்லது Biomechanics பல படிப்புகள் ஆஸ்திரேலிய பல்கலைகளில் வழங்கப்படுகின்றன. இத்தகைய படிப்புகளை வழங்குவதில், கனடா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளைப் போல், நியூசிலாந்தும் புகழ்பெற்று விளங்குகிறது.
வெளிநாட்டிற்கு பறக்கும் இந்திய மாணவர்கள், வாழ்வின் பல புதிய அனுபவங்களை அங்கே உணர்கின்றனர். அந்த அனுபவங்களை இந்தியாவில் அவர்கள் பகிர்ந்து கொள்கின்றனர். இதன்மூலம் ஒரு புதிய கலாசார இணைவு ஏற்படுகிறது.
விருப்பமுள்ளவர்கள், ஒயின் தயாரித்தல் போன்ற படிப்பையும் மேற்கொள்ள லாம். இப்படிப்பில், பட்டங்கள் மற்றும் டிப்ளமோக்களும் வழங்கப்படுகின்றன. இதுமட்டுமின்றி, Gaming management எனப்படும் சூதாட்ட அரங்க மேலாண்மை படிப்பும் வழங்கப் படுகிறது.
இந்தியாவில், வெறுமனே ஏதேனும் ஒரு பட்டத்தைப் பெறுவதை சில மாணவர்கள் விரும்பவில்லை. வெறும் ஹாஸ்பிடாலிடி (விருந்தோம்பல்) மேலாண்மை என்றளவில் உள்நாட்டில் ஒரு பட்டத்தைப் பெறுவதைவிட, உள்அரங்க விளையாட்டு மேலாண்மை யுடன் சேர்த்து, அந்தப் பட்டத்தை வெளிநாட்டில் பெறும்போது, அதன் மவுசு மற்றும் வாய்ப்புகள் அதிகரிக்கிறது.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X