Kalvimalar | சிறப்பு கல்வி நிறுவனம்| Dinamalar

சிறப்பு கல்வி நிறுவனம்

Added : மே 03, 2012
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
சிறப்பு கல்வி நிறுவனம்

வான்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான இந்திய கல்வி நிறுவனம்- ஐ.ஐ.எஸ்.டி., இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் ஸ்பேஸ் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி (IIST)ஆசியாவிலேயே முதல் வானியல் கல்வி நிறுவனமாகும். மேலும், உலகிலேயே இத்துறை சம்பந்தமாக, முழு அளவிலான இளநிலை, முதுநிலை மற்றும் முனைவர் பட்ட நிலையிலான படிப்புகளை வழங்க தொடங்கிய முதல் ஆராய்ச்சி நிறுவனம் இதுதான். பாடத்திட்டங்களை துவக்குவதற்கான அனுமதியை, கடந்த 2007ம் ஆண்டுதான் மத்திய அரசிடமிருந்து இந்நிறுவனம் பெற்றது. பாடத்திட்டங்களைத் தொடங்கி, 1 வருடத்திற்குள்ளாகவே, நிகர்நிலைப் பல்கலைக்கழக அந்தஸ்தைப் பெற்றுவிட்டது. இந்தியாவில் உள்ள தகுதிவாய்ந்த மற்றும் விருப்பமுள்ள இளைஞர்களுக்கு தேவையான பயிற்சிகளை அளித்து, இஸ்ரோவில் பணிபுரியுமளவிற்கு அவர்களை தகுதிபடுத்துவதே இதன் பிரதான நோக்கம். மத்திய விண்வெளி துறையின் கீழ் செயல்படும் ஒரு தன்னாட்சி அமைப்பாக இது செயல்பட்டு வருகிறது.
வளாக வசதிகள்:


* டேட்டா சென்டர்
* சிறந்த கம்ப்யூட்டிங் ஆய்வகம்
* ப்ரோகிராமிங் ஆய்வகம்
போன்ற முக்கிய வசதிகள் உள்ளன. இதைத்தவிர, விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு வசதிகளும், மருத்துவமனை மற்றும் முறையான விடுதி வசதிகளும் உள்ளன.
நூலகம்: இந்நிறுவனத்திலுள்ள நூலகத்தில், புகழ்பெற்ற பாடப்புத்தகங்கள், துணைப்பாடத் தொகுப்புகள் மற்றும் குறிப்பு புத்தகங்கள் போன்றவை உள்ளன. மேலும், 3000க்கும் மேற்பட்ட எலக்ட்ரானிக் ஜர்னல்களும், நூற்றுக்கணக்கான மாநாட்டு தாள்களும்(Conference paper) உள்ளன. மேலும்,VSSC (Vikram Sarabai Space
Centre) நூலகத்தின் ஆதரவைப் பெற்ற நூலகமாக இது விளங்குகிறது.
படிப்புகள்: இளநிலை, முதுநிலை மற்றும் ஆராய்ச்சி நிலை போன்ற பல நிலைகளில் இங்கே படிப்புகள் வழங்கப்படுகின்றன. ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங், அவியோனிக்ஸ் மற்றும் பிசிக்கல் சயின்ஸ் போன்ற துறைகளில் இளநிலைப் படிப்புகள் வழங்கப்படுகின்றன. மேலும், முதுநிலை அளவிலும் பலவிதமான படிப்புகள் வழங்கப்படுகின்றன.
ஆராய்ச்சி: இந்நிறுவனத்தின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆகியோர், தங்களது விருப்பமான துறையில் ஆராய்ச்சியை மேற்கொள்ள ஊக்கமளிக்கப்படுகிறார்கள். ஆராய்ச்சி செயல்பாடுகளுக்கு ஊக்கமளிக்கும் பொருட்டு, இஸ்ரோ மையங்கள் மற்றும் நாட்டின் பிற வான்வெளி கல்வி நிறுவனங்கள் மற்றும் ஆராய்ச்சி மையங்கள் ஆகியவற்றின் புகழ்பெற்ற உறுப்பினர்களைக் கொண்ட ஆராய்ச்சி வாரியம் ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது. நாட்டின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் தேவை மற்றும் இந்திய வான் ஆராய்ச்சி தேவைகளுக்கு ஈடுசெய்ய, முனைவர் பட்ட ஆராய்ச்சி படிப்புகள் இந்நிறுவனத்தில் வழங்கப்படுகின்றன. ஜியாலஜி (புவியமைப்பியல்), ஆங்கிலம் மற்றும் சமூக அறிவியல் போன்ற துறைகளில் ஆராய்ச்சி வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. இந்த முனைவர் பட்ட ஆராய்ச்சி வாய்ப்பிற்கான தகுதிநிலைகள் மற்றும் சேர்க்கை விபரங்கள் பற்றி முழுமையாக அறிந்துகொள்ள


http://www.iist.ac.in/ என்ற இணையதளம் செல்லவும்.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X